EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
இலுப்பைக்கடவை உபதபால் அலுவலகம் தேசிய ரீதியில் மீண்டும் முதலிடம்!

இலுப்பைக்கடவை உபதபால் அலுவலகம் தேசிய ரீதியில் மீண்டும் முதலிடம்!

ஐப்பசி 11, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மன்னார் மாவட்டத்தின் இலுப்பைக்கடவை உபதபால் அலுவலகம், போதிய அடிப்படை வசதிகள் இன்றி மூன்று பணியாளர்களுடன் செயற்பட்டு, தேசிய ரீதியில் மீண்டும் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

இலங்கையிலுள்ள 3,440 உபதபால் அலுவலகங்களில் ஒன்றான இலுப்பைக்கடவை உபதபால் அலுவலகம், 2015ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக 11 ஆண்டுகளாக வருமான ரீதியான தரப்படுத்தலில் சிறப்பான நிலையைப் பேணி வருகின்றது.

அத்துடன், நாடு முழுவதிலும் உள்ள 609 தபால் அலுவலகங்களையும் விட வருமான ரீதியாக முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், 2025–2026ஆம் ஆண்டுக்கான உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு, கொழும்பு அலரி மாளிகையில் நேற்று (10.10.2026) நடைபெற்ற நிகழ்வில் இலுப்பைக்கடவை உபதபால் அலுவலகம் பாராட்டி மதிப்பளிக்கப்பட்டுள்ளது. இதன்போது, சேவைச் சிறப்புக்கான சான்றிதழும் பரிசிலும் வழங்கப்பட்டுள்ளன.

மூன்று பணியாளர்களை மட்டுமே கொண்டு இயங்கும் இவ்வலுவலகத்தில், போதிய உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத நிலையிலும், பணியாளர்களின் அர்ப்பணிப்பான சேவையினாலேயே இத்தகைய சாதனை எட்டப்பட்டுள்ளது.

எனினும், இவ்வளவு சிறப்பான வருமானத்தையும் சேவைத் திறனையும் வெளிப்படுத்தும் அலுவலகத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகள் இதுவரை உரிய முறையில் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை எனக் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

இதனிடையே, வருமான ரீதியாகச் சிறப்பான பெறுபேறுகளைப் பதிவு செய்து வரும் இலுப்பைக்கடவை உபதபால் அலுவலகத்தை முழுமையான தபால் அலுவலகமாகத் தரமுயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

ஆனால், இலங்கைத் தபால் திணைக்களமும் வடமாகாண தபால் நிர்வாகமும் இவ்வலுவலகத்தின் தேவைகள் தொடர்பில் போதிய கவனம் செலுத்தவில்லை என்றும், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

எனவே, சாதனைகளைப் பாராட்டுவதுடன் நின்றுவிடாமல், தேசிய ரீதியில் சாதனை படைக்கும் ஓர் அலுவலகத்திற்கு உரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து முழுமையான தபால் அலுவலகமாகத் தரமுயர்த்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

ஐப்பசி 11, 2026
அனோஜனுக்குக் கருணை மன்னிப்பு வழங்கக் கோரிய சனத் ஜெயசூரிய!
இலங்கை

அனோஜனுக்குக் கருணை மன்னிப்பு வழங்கக் கோரிய சனத் ஜெயசூரிய!

ஐப்பசி 11, 2026
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நால்வர் உயிரிழப்பு!
அண்மைய செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நால்வர் உயிரிழப்பு!

ஐப்பசி 11, 2026
வடமராட்சி கிழக்கில் முச்சக்கர வண்டி விபத்து!
அண்மைய செய்திகள்

வடமராட்சி கிழக்கில் முச்சக்கர வண்டி விபத்து!

ஐப்பசி 11, 2026
பலாலியில் காணிகளை விடுவிக்கக் கோரி 17ஆவது வாரமாக தொடர் போராட்டம்!
அண்மைய செய்திகள்

பலாலியில் காணிகளை விடுவிக்கக் கோரி 17ஆவது வாரமாக தொடர் போராட்டம்!

ஐப்பசி 11, 2026
வலிகாமம் வடக்கில் பிளாஸ்டிக் ஒழிப்புச் செயற்றிட்டம்!
இலங்கை

வலிகாமம் வடக்கில் பிளாஸ்டிக் ஒழிப்புச் செயற்றிட்டம்!

ஐப்பசி 11, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

காட்டுயானைகளின் அத்துமீறல்களுக்கு உடனடித் தீர்வு தேவை – பா.உ துரைராசா ரவிகரன்

காட்டுயானைகளின் அத்துமீறல்களுக்கு உடனடித் தீர்வு தேவை – பா.உ துரைராசா ரவிகரன்

4 நாட்கள் முன்னர்
சிறைச்சாலைச் சட்டங்களைப் புதுப்பிக்க விசேட குழு – ஜனாதிபதி செயலகத்தில் முதற்கட்டக் கலந்துரையாடல்

சிறைச்சாலைச் சட்டங்களைப் புதுப்பிக்க விசேட குழு – ஜனாதிபதி செயலகத்தில் முதற்கட்டக் கலந்துரையாடல்

1 நாள் முன்னர்
மட்டக்களப்பில் கட்டிட சுவர் இடிந்து ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் கட்டிட சுவர் இடிந்து ஒருவர் உயிரிழப்பு

5 நாட்கள் முன்னர்
யாழ் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா

யாழ் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா

6 நாட்கள் முன்னர்
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நால்வர் உயிரிழப்பு!

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நால்வர் உயிரிழப்பு!

10 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check