தமிழ்நாட்டின் முழு நேர ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமிக்கப்பட்டுள்ளதாகக் குடியரசுத் தலைவர் மாளிகை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் ஆளுநராகப் பணியாற்றிய ஆர்.என். ரவி, மேற்கு வங்கத்திற்கு மாற்றப்பட்டதையடுத்து, கேரள மாநில ஆளுநராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழ்நாடு ஆளுநர் பதவியை கூடுதலாகக் கவனித்து வந்தார்.
இந்த நிலையில், அவர் தற்போது முழு நேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆர்.என். ரவி கடந்த 2021 செப்டம்பர் 18 முதல் 2026 மார்ச் 11 வரை தமிழக ஆளுநராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, கேரள மாநில ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், ஒடிசா, கர்நாடகா, உத்தரகாண்ட் மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கும் புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.











