இந்திய நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள செங்கோலை வடிவமைத்ததில் முக்கியப் பங்கு வகித்த உம்மிடி எத்திராஜ் சென்னையில் காலமானார்.
1926ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி பிறந்த அவர், அடுத்த மாதம் தனது 100ஆவது பிறந்தநாளைக் கொண்டாடவிருந்த நிலையில் காலமானார்.
இவர் 125 ஆண்டுகள் பழமையான உம்மிடி பங்காரு ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவராவார்.
1947ஆம் ஆண்டில் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு வழங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோல் வடிவமைப்பில் இவர் முக்கியப் பங்கு வகித்திருந்தார்.
பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து சுதந்திர இந்தியாவிற்கு அதிகாரம் கைமாறியதைக் குறிக்கும் இந்தச் செங்கோல், கடந்த 2023ஆம் ஆண்டு மே 28ஆம் தேதியன்று பிரதமர் மோடியால் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் நிறுவப்பட்டது.
உம்மிடி எத்திராஜின் மறைவுக்குப் பிரதமர் நரேந்திர மோடி, துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், உத்தர பிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா மற்றும் தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உள்ளிட்டோர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.











