நாட்டில் சீரற்ற வானிலை நிலவுவதால் வளிமண்டலவியல் திணைக்களம் மின்னல் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இதன்படி கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மின்னல் ஏட்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் எனவும் பலத்த காற்று வீசக் கூடும் எனவும் அத்திணைக்களம் கூறியுள்ளது.











