மாத்தறை தலல்ல நாஓட்டுன்ன கடற்கரைப் பகுதியில், இலங்கை கடற்படை மற்றும் கடலோரக் காவல்படை இணைந்து நடத்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையில் , 275 கிலோ ஹெராயின் மற்றும் 200 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடலோரக் காவல்படைக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில், 10 சாக்குகள், 11 பயணப் பைகள் மற்றும் சிறிய படகொன்றும் மீட்கப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.











