EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை மீள்குடியேற்றும் திட்டம்

இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை மீள்குடியேற்றும் திட்டம்

ஐப்பசி 25, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கைத் தமிழ் மக்களை மீண்டும் தாயகத்திற்கு அழைத்து வந்து மீள்குடியேற்றுவதற்கான தெளிவான திட்டம் மற்றும் இரு நாட்டு அரசாங்கங்களின் உத்தரவாதம் இல்லாமல் நிதி சேகரிப்பில் ஈடுபடுவதாகக் கூறப்படும் கனடியன் பேரவை மற்றும் ஜே.எம்.எஸ். அமைப்புகள், நிதி சேகரிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஈரோஸ் கட்சியின் தலைவர் இராஜநாதன் பிரபாகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியாவில் நேற்று சனிக்கிழமை (24) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இந்தியாவின் திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அகதி முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழ் மக்களை மீண்டும் தாயகத்திற்கு அழைத்து வருவதாகக் கூறி, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சில அமைப்புகள் நிதி சேகரித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த முயற்சியின் நோக்கத்தை வரவேற்பதாகத் தெரிவித்த அவர், மக்களை மீள்குடியேற்றுவதற்கான முறையான திட்டம், இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களுடனான கலந்துரையாடல்கள், அத்துடன் மீள்குடியேற்றத்திற்கான உத்தரவாதங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இதுவரை சேகரிக்கப்பட்ட நிதியின் மொத்தத் தொகை குறித்தும் சம்பந்தப்பட்ட அமைப்புகள் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

இந்தியாவில் உள்ள அகதிகளை மீள அழைத்து வருவதற்கு முன்னர், அவர்களின் விருப்பங்களை அறிந்துகொள்வதுடன், காணி, வீடு, வாழ்வாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்காக அடுத்த மாதம் தாம் குழுவினருடன் இந்தியாவுக்குச் சென்று, அங்குள்ள அகதி முகாம்களைப் பார்வையிட்டு மக்களின் விருப்பங்களை அறிந்துகொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர், இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களுடன் கலந்துரையாட முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள் கடவுச்சீட்டுகளைப் புதுப்பிப்பதிலும் புதிய கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வதிலும் நீண்ட காலத் தாமதங்களையும் அதிக செலவுகளையும் எதிர்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் கருத்துத் தெரிவித்த அவர், அரசாங்கம் ஊழல் மற்றும் குற்றச்செயல்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இறுதியாக, நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கடந்த தேர்தலின்போது 60 கோடி ரூபாய் பெற்றதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலும் அரசாங்கம் விசாரணை நடத்தி உண்மை நிலையைத் தெளிவுபடுத்த வேண்டும் என இராஜநாதன் பிரபாகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

‘முல்லை மோடி 2026’ ஆரம்பம்!
இலங்கை

‘முல்லை மோடி 2026’ ஆரம்பம்!

ஐப்பசி 25, 2026
யாழில் மதுபான போத்தல்களைப் புதைத்து விற்பனை செய்த நபர் கைது!
இலங்கை

யாழில் மதுபான போத்தல்களைப் புதைத்து விற்பனை செய்த நபர் கைது!

ஐப்பசி 25, 2026
தலங்கமவில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது
இலங்கை

தலங்கமவில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது

ஐப்பசி 25, 2026
கீரிமலை கற்குவாரி கழிவுகள் மீள அள்ளப்படவில்லை: வலி.வடக்கு பிரதேச சபை!
இலங்கை

கீரிமலை கற்குவாரி கழிவுகள் மீள அள்ளப்படவில்லை: வலி.வடக்கு பிரதேச சபை!

ஐப்பசி 25, 2026
கீரிமலையில் பிளாஸ்டிக் ஒழிப்புச் செயற்றிட்டம்!
இலங்கை

கீரிமலையில் பிளாஸ்டிக் ஒழிப்புச் செயற்றிட்டம்!

ஐப்பசி 25, 2026
19ஆவது வாரமாகத் தொடரும் காணி விடுதலைப் போராட்டம்!
இலங்கை

19ஆவது வாரமாகத் தொடரும் காணி விடுதலைப் போராட்டம்!

ஐப்பசி 25, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

மன்னாரில் இன்று நூலகக் கண்காட்சி ஆரம்பம்

மன்னாரில் இன்று நூலகக் கண்காட்சி ஆரம்பம்

4 நாட்கள் முன்னர்
முல்லைத்தீவில் ஆற்றில் மூழ்கி 20 வயது இளைஞன் உயிரிழப்பு

முல்லைத்தீவில் ஆற்றில் மூழ்கி 20 வயது இளைஞன் உயிரிழப்பு

6 நாட்கள் முன்னர்
கண்டியில் 42 மணி நேர நீர் விநியோகத் தடை – பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

கண்டியில் 42 மணி நேர நீர் விநியோகத் தடை – பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

5 நாட்கள் முன்னர்
மின் விநியோகக் கட்டமைப்பை மீண்டும் சீரமைப்பதே எங்களின் முக்கிய பணியாகும் – நலிந்த ஜெயதிஸ்ஸ

மின் விநியோகக் கட்டமைப்பை மீண்டும் சீரமைப்பதே எங்களின் முக்கிய பணியாகும் – நலிந்த ஜெயதிஸ்ஸ

5 நாட்கள் முன்னர்
யாழ்ப்பாணத்தில் புதிய மோட்டார் சைக்கிள் பதிவுச் சேவை ஆரம்பம்

யாழ்ப்பாணத்தில் புதிய மோட்டார் சைக்கிள் பதிவுச் சேவை ஆரம்பம்

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check