EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
காடழிப்பு தொடர்பில் வனவளத் திணைக்கள அதிகாரிகள் மீது குற்றம்சாட்டும் பா.உ.ரவிகரன்

காடழிப்பு தொடர்பில் வனவளத் திணைக்கள அதிகாரிகள் மீது குற்றம்சாட்டும் பா.உ.ரவிகரன்

கார்த்திகை 3, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

வன்னி மாவட்டத்தில் பொதுமக்களின் பூர்வீகக் காணிகள் மற்றும் விவசாய நிலங்களைத் துப்புரவு செய்வதற்கு ஆவணங்களைக் கோரி தடைவிதிக்கும் வனவளத் திணைக்களம், மறுபுறம் சட்டவிரோத காடழிப்புகளைக் கட்டுப்படுத்தத் தவறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்துடன், வனவளத் திணைக்களத்தில் பணியாற்றும் சில அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் அவர் சுற்றாடல் அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் இன்று மூன்றாம் திகதி நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினா நேரத்தின்போது எழுப்பப்பட்டுள்ளது.

இதன்போது கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னி மாவட்டப் பகுதிகளில் ஒருபுறம் நூற்றுக்கணக்கான ஏக்கர் வனப்பகுதிகள் சட்டவிரோதமாக அழிக்கப்படுவதாகவும், மறுபுறம் பொதுமக்கள் தங்களது பூர்வீகக் காணிகளைத் துப்புரவு செய்வதற்குக்கூட அனுமதி மறுக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக, காணிகளில் மாமரம், வேம்பு மரங்கள் மற்றும் பழைய வீடுகளின் அத்திவாரங்கள் காணப்பட்டாலும், உரிய ஆவணங்கள் இல்லை என்ற காரணத்தைக் கூறி துப்புரவுப் பணிகளுக்குத் தடைவிதிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், படையினரின் சட்டவிரோத நிர்மாணங்கள் மற்றும் அத்துமீறிய காடழிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் வனவளத் திணைக்களம் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட திரிவச்சகுளம் மற்றும் வவுனியா பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள பகுதிகளில் இடம்பெற்ற காடழிப்பு சம்பவங்களையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த சுற்றாடல் அமைச்சர் வைத்திய கலாநிதி தம்மிக்க பட்டபெந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் முன்வைத்துள்ள விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

வனப்பாதுகாப்புப் பகுதிகளில் காணிகளை வலுக்கட்டாயமாகக் கையகப்படுத்துவதற்கோ அல்லது வன அழிப்புக்கோ அரசாங்கம் அனுமதி வழங்குவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், சில வனப்பகுதிகளில் வளர்க்கப்படும் மரங்கள் வெட்டப்பட்டு மரக்கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்படுவதாகவும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

இதற்கிடையில், வனவளத் திணைக்களத்தின் சில அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களின் செயற்பாடுகள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

500 நாட்கள் கூட சிறையில் இருக்கத் தயார் – நாமல் ராஜபக்ச தெரிவிப்பு
இலங்கை

நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை

கார்த்திகை 3, 2026
சீரற்ற காலநிலையால் பாதிப்பு – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்
அண்மைய செய்திகள்

சீரற்ற காலநிலையால் பாதிப்பு – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்

கார்த்திகை 3, 2026
இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை இந்திய அரசாங்கம் பெற்றுத்தரும் -பா.உ. இளையதம்பி சிறிநாத்
அண்மைய செய்திகள்

இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை இந்திய அரசாங்கம் பெற்றுத்தரும் -பா.உ. இளையதம்பி சிறிநாத்

கார்த்திகை 3, 2026
சுகவீன விடுப்பு போராட்டத்தை அறிவித்துள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம்
அண்மைய செய்திகள்

சுகவீன விடுப்பு போராட்டத்தை அறிவித்துள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம்

கார்த்திகை 3, 2026
வடக்கு கடல் பரப்பில் அத்துமீறும் இந்திய மீனவர்கள்!
அண்மைய செய்திகள்

வடக்கு கடல் பரப்பில் அத்துமீறும் இந்திய மீனவர்கள்!

கார்த்திகை 3, 2026
ஷிரந்தியை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு!
அண்மைய செய்திகள்

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் படுகொலை வழக்கு – குற்றவாளிகளுக்கு விளக்கமறியல்

கார்த்திகை 3, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

ஹாலிஎல பகுதியில் மண்சரிவு அபாயம்

ஹாலிஎல பகுதியில் மண்சரிவு அபாயம்

4 நாட்கள் முன்னர்
கிளிநொச்சியில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்

கிளிநொச்சியில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்

2 நாட்கள் முன்னர்
அதிகரிக்கும் வீதி விபத்து மரணங்கள் – பொலிஸார் விடுத்துள்ள  விழிப்புணர்வு எச்சரிக்கை!

அதிகரிக்கும் வீதி விபத்து மரணங்கள் – பொலிஸார் விடுத்துள்ள விழிப்புணர்வு எச்சரிக்கை!

3 நாட்கள் முன்னர்
வடக்கு, கிழக்கு மீனவர்களுக்கான முக்கிய எச்சரிக்கை!

வடக்கு, கிழக்கு மீனவர்களுக்கான முக்கிய எச்சரிக்கை!

2 நாட்கள் முன்னர்
யாழில் இடம்பெற்ற  தேசிய தூய்மை தின நிகழ்வு

யாழில் இடம்பெற்ற தேசிய தூய்மை தின நிகழ்வு

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check