தமிழர் விடுதலைக்கூட்டணியின் கிளிநொச்சி செயற்பாட்டாளர்களுக்கும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்த சங்கரிக்கும் இடையிலான கலந்துரையாடல் தமிழர் விடுதலைக்கூட்டணியின் கிளிநொச்சி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது தொடர்ந்து வீ.ஆனந்த சங்கரி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிகையில், அவர் குறிப்பிட்டதாவது
தமிழரசு கட்சியின் எம் ஏ சுமந்திரன் அவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் கட்சியினை பொறுப்பெடுத்து இனிவரும் காலங்களில் தமிழ் மக்களுக்கான சேவையினை முன்னெடுக்க வேண்டும் என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் வீ ஆனந்த சங்கரி அவர்கள் தெரிவித்துள்ளார்.











