மொன்றியல் (Montreal) நகரில் உள்ள சாண்ட்-லாரன்ட் (Saint-Laurent) பகுதியில் இயங்கிவரும் யூத பாரம்பரிய உணவு உற்பத்தி நிலையமொன்றில் சந்தேகத்திற்குரிய தீவைப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதனால் அந்தச் சொந்தக் கட்டிடம் பலத்த சேதமடைந்துள்ளதாக மொன்றியல் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த சுமார் 60 தீயணைப்பு வீரர்கள், ஏறக்குறைய இரண்டு மணிநேரத் தீவிர போராட்டத்திற்குப் பிறகே தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட தடயங்கள் மற்றும் ஆதாரங்களை ஆய்வு செய்த மொன்றியல் பொலிஸார், இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தீவைப்புத் தாக்குதல் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும், இதே கட்டடத்தில் கடந்த திங்கள்கிழமை இரவு சுமார் 11:30 மணியளவில் தீவைப்பதற்கான முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டதாகவும், எனினும் அதில் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொடர்ச்சியாக இரண்டு நாட்களாக மேற்கொள்ளப்பட்ட இந்தச் சம்பவங்கள் குறித்து மொன்றியல் பொலிஸ் திணைக்களத்தின் தீவைப்பு குற்றப்புலனாய்வுப் பிரிவும் (Arson Squad), வெறுப்புக் குற்றங்கள் தடுப்புப் பிரிவும் (Hate Crimes Division) இணைந்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன.











