வவுனியா பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தின் மதில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
நிகழ்வில் வவுனியா மாநகரசபை முதல்வர் சுந்தரலிங்கம் காண்டீபன் முதன்மை அதிதியாகக் கலந்துகொண்டு, அடிக்கல் நாட்டும் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
குறித்த வேலைத்திட்டத்திற்காக வவுனியா மாநகரசபையின் நிதியிலிருந்து 50இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மாநகரசபையின் பூந்தோட்டம் வட்டார உறுப்பினர் சி.கிருஷ்ணதாஸ், மாநகரசபை உறுப்பினர் ஜோகேஸ்வரி, செயலாளர் அ.பாலகிருபன், லயன்ஸ் விளையாட்டுக் கழக உப தலைவர் பார்த்தீபன், கிராம அலுவலர், மற்றும் கிராம மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.











