யாழ்ப்பாணத்தில் வடைக்குள் இரும்பு கம்பி காணப்பட்ட சம்பவத்தில், உணவக உரிமையாளருக்கு ஒரு மாத கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து அதனை ஐந்து வருட காலத்திற்கு நீதிமன்று ஒத்திவைத்துள்ளதுடன் , 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது
பருத்தித்துறை நகர சபை ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் வழங்கப்பட்ட கடலை வடையினுள், பாத்திரம் கழுவ பயன்படுத்தப்படும் கம்பி சுருளின் (ஸ்டில் வூல்) கம்பி துண்டு ஒன்று காணப்பட்டுள்ளது.
அது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், விசாரணைகளை முன்னெடுத்து , உணவக உரிமையாளருக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார்.
குறித்த வழக்கு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தம் மீதான குற்றச்சாட்டுக்களை உணவக உரிமையாளர் ஏற்றுக்கொண்டதை அடுத்து, ஒரு மாத சிறைத்தண்டனை விதித்து, அதனை ஒரு மாத காலத்திற்கு ஒத்திவைத்த மன்று, 10ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது.











