கிளிநொச்சி பரந்தன் கிராம மக்கள், இடைநிறுத்தப்பட்ட டித்வா புயல் வீட்டுத்திட்ட நிதியை உடனடியாக வழங்குமாறு கோரி, மாவட்டச் செயலகத்திற்கு முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆரம்பக் கொடுப்பனவைப் பெற்று வீடுகளைக் கட்டத் தொடங்கிய நிலையில், எஞ்சிய நிதி நிறுத்தப்பட்டதால் கடன் சுமையை எதிர்கொண்டுள்ளதாக மக்கள் தெரிவித்தனர். தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரையும் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்தனர்.
இதற்குப் பதிலளித்த மாவட்ட அரசாங்க அதிபர் சுப்ரமணியம் முரளிதரன், அமைச்சின் புதிய அறிவுறுத்தலுக்கு அமைய, பயனாளிகளின் ஆவணங்கள் உறுதிப்படுத்தப்பட்டு பரிந்துரைகளுடன் அனுப்பப்பட்ட பின்னர், நிதியை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.











