நாட்டின் இரத்தினபுரி, காலி, கேகாலை, குருநாகல் மற்றும் மாத்தறை ஆகிய ஐந்து மாவட்டங்களில் எலிக்காய்ச்சல் நோயின் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
நிலவும் மழையுடனான வானிலை மற்றும் விவசாய நடவடிக்கைகள் அதிகரித்துள்ளமை நோய்த்தொற்று பரவுவதற்குக் காரணமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, நெல் வயல்கள் மற்றும் வெள்ளம் தேங்கிய பகுதிகளில் பணியாற்றுவோர் பாதுகாப்பு காலணிகளை அணியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், காய்ச்சல், உடல்வலி மற்றும் தலைவலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.











