சாவகச்சேரி காவல்துறை பிரிவிற்குட்பட்ட, மறவன்புலவு – அறுகுவெளி பகுதியில் பெருமளவான கஞ்சாவுடன், இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, 284 கிலோ 500 கிராம் எடையுள்ள கஞ்சாப் பொதிகளும் மீட்கப்பட்டன.
குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சாவகச்சேரி காவல் நிலைய பொறுப்பதிகாரி பாலித செனவிரத்ன தலைமையிலான காவல்துறை குழுவினரால் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளின் பின்னர் அவர்களை, சாவகச்சேரி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைக் காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.











