‘கோட்-டெஸ்-நெய்ஜஸ்’ துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, உலகெங்கும் உள்ள சமூகவியல் வல்லுநர்கள் மற்றும் இணையப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் மத்தியில் ‘இன்செல்'(Incel) துணைக்கலாச்சாரம் குறித்த விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. இன்செல் என்பது பலதரப்பட்ட சமூக ஊடகத் தளங்களில் பரவிக் கிடக்கும் ஒரு பரந்த ‘இணையக் கட்டமைப்பு’ (Online Ecosystem) என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
மொன்றியல் தாக்குதலில் ஈடுபட்ட கொலையாளியிடமிருந்து 104 பக்கங்கள் கொண்ட பெண் வெறுப்பு அறிக்கை கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ‘இன்செல்’ (Incel) துணைக்கலாச்சாரம் எனும் கருத்தோட்டத்தின் வேர்களைக் கண்டறியும் ஆய்வுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதனை வெறுமனே சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகளால் மட்டும் ஒடுக்க முடியாது என்றும், இளம்பருவத்திலேயே முறையான விழிப்புணர்வுக் கல்வி (Education Counters Hate) வழங்குவதன் மூலமே இதனை வேரறுக்க முடியும் என்றும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
‘இன்செல்’ (Incel) துணைக்கலாச்சாரம் எனும் கருத்தோட்டமானது 1990-களில் கனடாவைச் சேர்ந்த ஒரு பெண் மாணவியால், ‘தனிமையைப் போக்கும்’ நோக்கில் ஒரு சாதாரண இணைய ஆதரவுக் குழுவாகவே இது தொடங்கப்பட்டது. ஆனால், கடந்த பத்து ஆண்டுகளில் இது முற்றிலும் தீவிரவாதத் தன்மை கொண்டதாக மாறியுள்ளது.
இக்குழுக்கள் ரெடிட் (Reddit), 4சான் (4chan), Forums விவாதக் களங்கள் முதல் யூடியூப் மற்றும் டிக்டாக் போன்ற பிரதான சமூக ஊடகங்கள் மற்றும் கேமிங் தளங்கள் (Discord) வரை பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.











