மொன்றியல் நகரில் வீடற்ற நிலையில் வாழும் (Unhoused) ஆதரவற்ற மக்களுக்காக நீண்ட நாட்களாகத் திட்டமிடப்பட்டிருந்த பிரம்மாண்ட ‘மொடுலர்’ தற்காலிக வீட்டுத் திட்டத்தை (Modular Housing Project) மொன்றியல் மாநகர சபை ரத்து செய்துள்ளது.
மொன்றியல் மாநகர சபையின் இந்தத் திடீர் முடிவுக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் மத்தியில் இருந்து பலத்த எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
“மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதைத் தடுக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்று மொன்றியல் மாநகர சபை தனது முடிவை நியாயப்படுத்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கைவிடப்பட்டுள்ள இந்த ‘மொடுலர்’ தற்காலிக வீட்டுத் திட்டத்தை, மொன்றியல் நகரின் முந்தைய மேயர் தொடங்கி வைத்திருந்தார்.
ஆரம்பத்தில் கணிக்கப்பட்ட திட்டச் செலவை விட, தற்போதைய மதிப்பீடு நான்கு மடங்கு (Four times higher) அதிகமாக உயர்ந்துள்ளதே இதற்குக் காரணம் என, மொன்றியல் மாநகர சபை விளக்கமளித்துள்ளது.











