EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
யாழ்ப்பாணம் கீரிமலை குப்பை மேட்டிற்கு தீ வைப்பு

யாழ்ப்பாணம் கீரிமலை குப்பை மேட்டிற்கு தீ வைப்பு

ஆடி 29, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் கீரிமலை குப்பை மேட்டில் இரண்டு நாட்களாக நெருப்பு எரிந்து வருகிறது. அதனால் ஏற்பட்டுள்ள புகையால் அப்பகுதி மக்கள் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

வலி. வடக்கு பிரதேசத்தில் மாவிட்டபுரம் – கீரிமலை வீதியில் , 1990ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் சுண்ணக்கற்கள் அகழ்ந்த பகுதிகளில் பாரிய குழிகள் காணப்படுகின்றன.

அவற்றுக்குள் குப்பைகளை கொட்டி “சுகாதார நில நிரவுகை திட்டம்” என குழிகளை மூடும் நடவடிக்கை 2019ஆம் ஆண்டு கால பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. அதற்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் அது கைவிடப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் அந்த குழிகளுக்குள் வலி. தெற்கு பிரதேச சபையினர் மற்றும் கடற்படையினர் டிப்பர் வாகனங்களில் கழிவுகளை கொண்டு வந்து கொட்டி வருகின்றனர்.

இது தொடர்பில் கடந்த 16ஆம் திகதி வலி. வடக்கு பிரதேச சபையின் மாதாந்த கூட்டத்தில் உறுப்பினர்கள் அது தொடர்பில் பிரஸ்தாபித்து , அந்த குழிகளுக்குள் குப்பைகளை கொட்ட அனுமதிப்பதில்லை எனவும் , கொட்டப்பட்ட குப்பைகளை மீள அள்ளுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில் தமது சபை தீர்மானத்தையும் மீறி , வலி. தெற்கில் இருந்து குப்பைகளை கொண்டு வந்து கொட்டுவதாக வலி.வடக்கு பிரதேச சபையின் சுகாதார குழுவினருக்கு தகவல் கிடைத்து நேற்று முன்தினம் திங்கட்கிழமை அப்பகுதி சென்ற போது அங்கு கடற்படையினர் டிப்பர் வாகனத்தில் குப்பைகளை கொட்டுவதற்கு வந்த வேளை திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில் குப்பைகள் கொட்டப்பட்டு இருந்த பகுதிக்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்று தீ வைத்துள்ளது.

குறித்த தீ இரண்டு நாட்களாக தொடர்ந்து எரிந்து வருவதனால் , அப்பகுதி மக்கள் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

நாட்டின் சில பகுதிகளில் நாளை பலத்த மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு
அண்மைய செய்திகள்

நாட்டின் சில பகுதிகளில் நாளை பலத்த மழைவீழ்ச்சிக்கு வாய்ப்பு

ஆடி 30, 2026
முல்லைத்தீவு – கோவில் குடியிருப்பு பழைய பூங்கா வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்
அண்மைய செய்திகள்

முல்லைத்தீவு – கோவில் குடியிருப்பு பழைய பூங்கா வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

ஆடி 30, 2026
கியூபெக்கில் ரக்கூன் வகை வெறிநோய் (Raccoon Rabies): செல்லப்பிராணிகளுக்குத் தடுப்பூசி செலுத்த MAPAQ அறிவுறுத்தல்!
அண்மைய செய்திகள்

கியூபெக்கில் ரக்கூன் வகை வெறிநோய் (Raccoon Rabies): செல்லப்பிராணிகளுக்குத் தடுப்பூசி செலுத்த MAPAQ அறிவுறுத்தல்!

ஆடி 30, 2026
வெளிநாட்டு ஸ்ட்ரீமிங் நிறுவனங்களுக்குக் கனடா புதிய உத்தரவு: அமெரிக்க அமைப்புகள் கடும் எதிர்ப்பு!
அண்மைய செய்திகள்

வெளிநாட்டு ஸ்ட்ரீமிங் நிறுவனங்களுக்குக் கனடா புதிய உத்தரவு: அமெரிக்க அமைப்புகள் கடும் எதிர்ப்பு!

ஆடி 30, 2026
மொன்றியால்-ட்ரூடோ விமான நிலையத்தில் துர்நாற்றம்: அமெரிக்க சுங்கத் துறை சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!
அண்மைய செய்திகள்

மொன்றியால்-ட்ரூடோ விமான நிலையத்தில் துர்நாற்றம்: அமெரிக்க சுங்கத் துறை சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

ஆடி 30, 2026
மொன்றியல் பார்க் எக்ஸ்டென்ஷனில் முதியவர்களுக்கான வீடமைப்புத் திட்டத்திற்கு விண்ணக்க காலக்கெடு அறிவிப்பு!
அண்மைய செய்திகள்

மொன்றியல் பார்க் எக்ஸ்டென்ஷனில் முதியவர்களுக்கான வீடமைப்புத் திட்டத்திற்கு விண்ணக்க காலக்கெடு அறிவிப்பு!

ஆடி 30, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

கியூபெக் – லோங்வே மெட்ரோ ரயில் நிலையத்தில் நள்ளிரவில் மோதல் — பொலிஸார் தீவிர விசாரணை!

கியூபெக் – லோங்வே மெட்ரோ ரயில் நிலையத்தில் நள்ளிரவில் மோதல் — பொலிஸார் தீவிர விசாரணை!

6 நாட்கள் முன்னர்
மயிலிட்டியில் 14ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

மயிலிட்டியில் 14ஆவது வாரமாக தொடரும் போராட்டம்

6 நாட்கள் முன்னர்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சர்வதேச மாநாடு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சர்வதேச மாநாடு

3 நாட்கள் முன்னர்
மொன்றியல் பார்க் எக்ஸ்டென்ஷனில் முதியவர்களுக்கான வீடமைப்புத் திட்டத்திற்கு விண்ணக்க காலக்கெடு அறிவிப்பு!

மொன்றியல் பார்க் எக்ஸ்டென்ஷனில் முதியவர்களுக்கான வீடமைப்புத் திட்டத்திற்கு விண்ணக்க காலக்கெடு அறிவிப்பு!

19 மணத்தியாலங்கள் முன்னர்
மன்னாரிற்கு அமெரிக்காவின் அரசியல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான அதிகாரிகள் விஜயம்

மன்னாரிற்கு அமெரிக்காவின் அரசியல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான அதிகாரிகள் விஜயம்

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In