EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
வெடுக்குநாறிமலை வழிபாடு தொடர்பான பொலிசாரின் விண்ணப்பம் நீதிமன்றால் நிராகரிப்பு

வெடுக்குநாறிமலை வழிபாடு தொடர்பான பொலிசாரின் விண்ணப்பம் நீதிமன்றால் நிராகரிப்பு

புரட்டாதி 24, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

வெடுக்குநாறிமலையில் இருதரப்புக்கள் ஒரே நேரத்தில் வழிபடுவதால் சமாதானகுலைவு ஏற்ப்படும் என்ற நெடுங்கேணி பொலிசாரின் விண்ணப்பம் வவுனியா நீதிமன்றால் இன்று நிராகரிக்கப்பட்டதுடன் சட்டம் மீறப்பட்டால் மாத்திரமன்றி மாறாக நேரத்தை வீண்டிக்க வேண்டாம் என்றும் பொலிசாருக்கு நீதவான் அறிவுறுத்தியுள்ளார்.

நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் எதிர்வரும் சனிக்கிழமை வடக்குமாகாண தலைமை தேரர் சந்தபோதி தலைமையில் பௌத்த நிகழ்வு ஒன்று ஏற்ப்பாடாகியுள்ளது. இந்நிலையில் அன்றையதினம் சைவமக்கள் புரட்டாதி சனி விசேட பூஜை வழிபாடுகளில் அங்கு ஈடுபடவுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த தினத்தில் அந்தபகுதியில் இருதரப்பும் ஒரே நேரத்தில் வழிபாட்டிற்கு செல்வதால் சமாதான குலைவு ஏற்ப்படும் என்று நெடுங்கேணி பொலிசார் வவுனியா நீதிமன்றிற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

இதனையடுத்து ஆலயத்தின் நிர்வாகத்தினரும் பௌத்த தேரர் தரப்பும் இன்று நீதிமன்றிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது வெடுக்குநாறிமலையில் வழிபடும் சுதந்திரத்திற்கு தடை ஏற்ப்படுத்த முடியாது என உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளதை சட்டத்தரணி எம்.எ.சுமந்திரன் மன்றுக்கு சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்துடன் சட்டம் மீறப்படுகின்ற சந்தர்ப்பத்தில் மாத்திரம் பொலிசார் நீதிமன்றிற்கு வரவேண்டும் மாறாக மன்றின் நேரத்தை வீணாக்க கூடாது என்று நீதவான் பொலிசாருக்கு உத்தரவிட்டதுடன் பொலிசாரின் விண்ணப்பத்தையும் நிராகரித்துள்ளார்.

இதேவேளை ஆலயநிர்வாகம் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எ.சுமந்திரன் தலைமையில் சிரேஸ்ட சட்டத்தரணி தி.திருவருள் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.அத்துடன் கல்கமுவ சந்தபோதிதேரரும் அவரது சட்டத்தரணிகளும் முன்னிலையாகியிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு
அண்மைய செய்திகள்

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு

புரட்டாதி 24, 2026
நுவரெலியா கல்வி வலயத்திற்கு விசேட விடுமுறை
அண்மைய செய்திகள்

நுவரெலியா கல்வி வலயத்திற்கு விசேட விடுமுறை

புரட்டாதி 24, 2026
கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன்  பலி
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் பலி

புரட்டாதி 24, 2026
கிளிநொச்சியில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்

புரட்டாதி 24, 2026
தையிட்டி விகாரை வழக்கு – ஜனவரி மாதம் ஒத்திவைப்பு
அண்மைய செய்திகள்

தையிட்டி விகாரை வழக்கு – ஜனவரி மாதம் ஒத்திவைப்பு

புரட்டாதி 24, 2026
அனோஜனின் மறுவாழ்வுக்காக ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் – சர்வமத தலைவர்கள் கோரிக்கை
அண்மைய செய்திகள்

அனோஜனின் மறுவாழ்வுக்காக ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் – சர்வமத தலைவர்கள் கோரிக்கை

புரட்டாதி 24, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

பனிக்கன்குளம் பகுதியில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இருவர் அடித்துக் கொலை

பனிக்கன்குளம் பகுதியில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இருவர் அடித்துக் கொலை

8 மணத்தியாலங்கள் முன்னர்
யாழில் திடீர் மின்சார விநியோக தடை

யாழில் திடீர் மின்சார விநியோக தடை

4 நாட்கள் முன்னர்
புத்தூரில் வயோதிப பெண் அடித்துக் கொலை

யாழில் பொலிஸார் மறித்த இளைஞன் மரணம்

5 நாட்கள் முன்னர்
வவுனியாவில் சர்வதேச சைகை மொழி தின விழிப்புணர்வுப் பேரணி

வவுனியாவில் சர்வதேச சைகை மொழி தின விழிப்புணர்வுப் பேரணி

7 மணத்தியாலங்கள் முன்னர்
நல்லூரில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் ஏழாம் நாள் நிகழ்வு

நல்லூரில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் ஏழாம் நாள் நிகழ்வு

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check