EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
தியாக தீபத்தின் சிலையை ஏற்க நீதிமன்றம் மறுப்பு

தியாக தீபத்தின் சிலையை ஏற்க நீதிமன்றம் மறுப்பு

ஐப்பசி 3, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நிலைவாலயத்தில் இருந்து பொலிஸாரினால் எடுத்து செல்லப்பட்ட தியாக தீபத்தின் சிலையை நீதிமன்றம் பொறுப்பேற்க மறுத்துள்ளது.

அதேவேளை சிலை வைக்கப்பட்டமை மற்றும் நினைவாலயத்தில் பாடல் ஒலிக்க விடப்பட்டமை உள்ளிட்ட சம்பவங்கள் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்,

ஐந்தம்ச கோரிக்கைகளை முன்வைத்து 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி நல்லூர் ஆலய வடக்கு வீதியில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த தியாக தீபம், அவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் 26ஆம் திகதி காலை 10.48 மணிக்கு அவரது உயிர் பிரித்தது

இம்முறை 39ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்ற வேளை தியாக தீபத்தின் சிலை ஒன்று வைக்கப்பட்டு , அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

நினைவேந்தல் நிகழ்வுகள் முடிந்து மறுநாள் 27ஆம் திகதி யாழ்ப்பாண தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான சுமார் 20 பேர் கொண்ட பொலிஸ் குழுவினர் நினைவாலயம் பகுதிக்கு சென்று சிலையை எடுத்து சென்றனர்.

இந்நிலையில், நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் சிலை தொடர்பிலான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பொலிஸாரினால் சிலையை நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன் போது , சிலையை யார் வைத்தார்கள் ? அதன் பின்னணியில் யார் உள்ளனர் ? போன்ற எந்த அடிப்படையும் இல்லாது சிலையை மாத்திரம் மன்றில் ஒப்படைக்க முடியாது என கூறி மன்று சிலையை ஏற்க மறுத்தது.

அதனை தொடர்ந்து சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்று , மேலதிக நடவடிக்கையை எடுப்பதாக மன்றுக்கு கூறி பொலிஸார் சிலையை பொலிஸ் நிலையம் எடுத்து சென்றனர்

அதேவேளை நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்த கால பகுதியில் 18ஆம் திகதி நினைவாலயத்தில் பயன்படுத்தப்பட்ட ஒலிபெருக்கி சாதனங்களை , அனுமதியின்றி ஒலிபெருக்கி பாவித்ததாக கூறி, அவற்றை பொலிஸார் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர்

ஒலிபெருக்கி சாதனத்தில் பாடல்கள் ஒலிக்கவிடப்பட்டமை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளை சிலை அகற்றப்பட்ட கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் , சிலையை அவ்விடத்தில் நிறுவ வேண்டும் என நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை வரையில் யாழ்ப்பாணத்தில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ஈரானிய எண்ணெய் கப்பல்களால் இலங்கைக்கு புதிய இராஜதந்திர சவால்
அண்மைய செய்திகள்

ஈரானிய எண்ணெய் கப்பல்களால் இலங்கைக்கு புதிய இராஜதந்திர சவால்

ஐப்பசி 3, 2026
இலங்கையில் வேலையின்மை விகிதம் 4 சதவீதமாக உயர்வு!
இலங்கை

இலங்கையில் வேலையின்மை விகிதம் 4 சதவீதமாக உயர்வு!

ஐப்பசி 3, 2026
மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு
அண்மைய செய்திகள்

மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு

ஐப்பசி 3, 2026
வடமராட்சி கிழக்கு பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட கணனிகள் மற்றும் மடிக்கணனிகள்
அண்மைய செய்திகள்

வடமராட்சி கிழக்கு பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட கணனிகள் மற்றும் மடிக்கணனிகள்

ஐப்பசி 3, 2026
பருத்தித்துறை இரத்த வங்கியில் தொடரும் குருதி தட்டுப்பாடு
இலங்கை

பருத்தித்துறை இரத்த வங்கியில் தொடரும் குருதி தட்டுப்பாடு

ஐப்பசி 3, 2026
தலவாக்கலையில்  இடி மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

தலவாக்கலையில் இடி மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

ஐப்பசி 3, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

தியாக தீபத்தின் சிலையை மீள நிறுவுமாறு போராட்டம் முன்னெடுப்பு

தியாக தீபத்தின் சிலையை மீள நிறுவுமாறு போராட்டம் முன்னெடுப்பு

5 நாட்கள் முன்னர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பட்டமளிப்பு விழா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பட்டமளிப்பு விழா

10 மணத்தியாலங்கள் முன்னர்
கிளிநொச்சியில்  மூன்று கிராமங்களை உள்ளடக்கிய அனர்த்த ஒத்திகை

கிளிநொச்சியில் மூன்று கிராமங்களை உள்ளடக்கிய அனர்த்த ஒத்திகை

5 நாட்கள் முன்னர்
யாழில். 34 பயனாளிகளுக்கு வாழ்க்கைக்கான வலிமை வீட்டு திட்டம்

யாழில். 34 பயனாளிகளுக்கு வாழ்க்கைக்கான வலிமை வீட்டு திட்டம்

1 நாள் முன்னர்
யாழில். இடம்பெற்ற வடமாகாண பண்பாட்டு விழா

யாழில். இடம்பெற்ற வடமாகாண பண்பாட்டு விழா

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check