யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை மூன்று நாள்களுக்கு, ஒன்பது அமர்வுகளாக பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
பல்கலைக்கழகத்தின் 5ஆவது வேந்தர் தகைசால் பேராசிரியர் இராஜரட்ணம் குமாரவடிவேல் விழாவுக்குத் தலைமை தாங்கி, பட்டதாரிகளுக்கான பட்டங்கள், தகைமைச் சான்றிதழ்கள், தங்கப் பதக்கங்கள், பரிசில்கள் மற்றும் புலமைப்பரிசில்களை வழங்கிக் கௌரவிக்கவுள்ளார்.
இந்த விழாவில் பல்வேறு பீடங்களைச் சேர்ந்த பட்டதாரிகளுடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தின் ஊடாக கற்கைநெறிகளைப் பூர்த்தி செய்தவர்களுக்கும் பட்டங்கள் மற்றும் தகைமைச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.
மொத்தமாக 314 பட்டப்பின் தகைமை பெற்றவர்கள், 2 ஆயிரத்து 680 உள்வாரி மாணவர்கள் மற்றும் 417 வெளிவாரி மாணவர்கள் என ஆயிரக்கணக்கானோர் பட்டங்களைப் பெறவுள்ளனர்.
மேலும், 10 உயர் தகைமை மற்றும் தகைமைச் சான்றிதழ்களும், தொழில்சார் ஆங்கிலத்தில் 24 தகைமைச் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.
© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved