தலவாக்கலை பாமஸ்டன் பகுதியில் இடி மின்னல் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாமஸ்டனில் பிற்பகலில் பெய்த கனமழையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் 50 வயது சுப்பிரமணியம் தேவகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பாமஸ்ரன் தோட்டப் பகுதிகளில் பலத்த இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இதன்போது நான்கு பேர் வீடொன்றில் இருந்த நிலையில், எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியதில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.











