EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
கீரிமலையில் கொட்டப்படும்  குப்பைகள் தொடர்பில்  ஆளுநர் அலுவலகத்தில் முறைப்பாடு

கீரிமலையில் கொட்டப்படும் குப்பைகள் தொடர்பில் ஆளுநர் அலுவலகத்தில் முறைப்பாடு

புரட்டாதி 29, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கீரிமலை பிரதேசத்தில் கட்டுப்பாடின்றி கழிவுகள் கொட்டப்பட்டுள்ள நிலையில், அதனை பார்வையிட்ட வடமாகாண ஆளுநர் “இதொரு பேரனார்த்தம்” என கூறியுள்ள போதிலும் , அதற்கு காரணமானவர்களை எதிராக ஏன் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை என வலி. வடக்கு பிரதேச சபை அமர்வை புறக்கணித்த உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வலி. வடக்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட கீரிமலை பகுதியில் வலி.வடக்கு மற்றும் வலி தெற்கு பிரதேச சபைகளால் கட்டுப்பாடு இன்றி கழிவுகள் கொட்டப்பட்டுள்ள நிலையில் , அவற்றை மீள அள்ளுமாறு வடமாகாண ஆளுநர் , வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர், உதவி ஆணையாளர் உள்ளிட்டவர்கள் இரண்டு பிரதேச சபை செயலர்கள் மற்றும் தவிசாளர்களுக்கு பணித்துள்ளனர்,

இந்நிலையில் கீரிமலையில் கொட்டப்பட்ட கழிவுகள் அள்ளும் பணிகள் மந்த கெதியில் நடைபெறுவதாகவும், அதனை துரித கெதியில் இயந்திர வலுக்களை பயன்படுத்தி அகற்ற வேண்டும் என கோரி வலி. வடக்கு பிரதேச சபையின் 10 உறுப்பினர்கள் சபை அமர்வை புறக்கணித்தனர்.

அவ்வாறு சபை அமர்வை புறக்கணித்த 10 உறுப்பினர்களும் கீரிமலையில் குப்பை கொட்டப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது,

ஆளூனர் . உள்ளூராட்சி ஆணையாளர் ஆகியோர் கழிவுகளை இயந்திர வலுக்களை பயன்படுத்தி துரிதமாக மீள அள்ளுமாறு பணித்துள்ள போதிலும் , தவிசாளர்களோ செயலாளர்களோ அது தொடர்பில் கவனம் செலுத்தாது , மனித வலுக்களை பயன்படுத்தி மிக மந்த கெதியில் கழிவுகளை அகற்றுகின்றனர்.

பருவ மழை ஆரம்பிக்க முன்னர் கொட்டப்பட்ட கழிவுகளை அகற்றவே கோரி வருகிறோம். எதிர்வரும் மாதங்களில் பருவ மழை ஆரம்பித்து விடும். அதன் பின்னர் இங்கே கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட அனைத்து கழிவுகளும் நிலத்தடி நீருடன் கலந்து விடும்.

அவ்வாறு நிலத்தடி நீருடன் கழிவுகள் கலந்தால் , வலி.வடக்கு பிரதேசம் மாத்திரமின்றி வலி. தெற்கு பிரதேச நிலத்தடி நீரும் மாசுபடும். அதன் பின்னர் நீரினை பரிசோதித்து , இந்த நீரினை குடிப்பதற்கு பயன்படுத்தாதீர்கள் என சுத்திகரிக்கப்பட்ட நீர் என பணம் கொடுத்து நீரினை வாங்க வைக்க போகிறார்களா ?

எனவே மழைக்கு முதல் எவ்வளவு வேகமாக கழிவுகளை அகற்ற முடியுமோ அவ்வளவு வேகமாக கழிவுகளை அகற்ற வேண்டும்.

வடமாகாண ஆளுநர் இந்த இடத்தை பார்வையிட்ட போது “இதொரு பேரனார்த்தம்” என குறிப்பிட்டு இருந்தார். அவ்வாறு பேரனார்த்தம் ஏற்பட காரணமானவர்களுக்கு எதிராக ஏன் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

அதேவேளை சபை அமர்வை புறக்கணித்த 10 உறுப்பினர்களும் வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு சென்று , மிக விரைவாக இயந்திர வலுக்களை பயன்படுத்தி கழிவுகளை அகற்ற ஆளூனர் உத்தரவிட்டுள்ள போதிலும் , கழிவகற்றல் பணிகள் மந்த கெதியில் உள்ளதாக முறையிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கால்நடை வைத்திய அதிகாரிகளின் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு
இலங்கை

கால்நடை வைத்திய அதிகாரிகளின் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு

புரட்டாதி 29, 2026
பெரும் முதலாளிகளின் கடலட்டை வளர்ப்பால் சிறு மீனவர்கள் பாதிப்பு
இலங்கை

பெரும் முதலாளிகளின் கடலட்டை வளர்ப்பால் சிறு மீனவர்கள் பாதிப்பு

புரட்டாதி 29, 2026
உணவின் தரம் குறித்து மீண்டும் கேள்வி – மன்னாரில் அதிர்ச்சி சம்பவம்
இலங்கை

உணவின் தரம் குறித்து மீண்டும் கேள்வி – மன்னாரில் அதிர்ச்சி சம்பவம்

புரட்டாதி 29, 2026
பருத்தித்துறையில் மக்கள் குடியிருப்புக்கு அருகாமையில் தீ பரவல்!
அண்மைய செய்திகள்

பருத்தித்துறையில் மக்கள் குடியிருப்புக்கு அருகாமையில் தீ பரவல்!

புரட்டாதி 29, 2026
யாழில். இடம்பெற்ற வடமாகாண பண்பாட்டு விழா
அண்மைய செய்திகள்

யாழில். இடம்பெற்ற வடமாகாண பண்பாட்டு விழா

புரட்டாதி 29, 2026
யாழில் மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்
அண்மைய செய்திகள்

யாழில் மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்

புரட்டாதி 29, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

பனிக்கன்குளம் பகுதியில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இருவர் அடித்துக் கொலை

பனிக்கன்குளம் பகுதியில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இருவர் அடித்துக் கொலை

5 நாட்கள் முன்னர்
நல்லூரில் தியாக தீபத்தின் ஒன்பதாம் நாள் நிகழ்வு

நல்லூரில் தியாக தீபத்தின் ஒன்பதாம் நாள் நிகழ்வு

6 நாட்கள் முன்னர்
கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன்  பலி

கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் மோதி சிறுவன் பலி

5 நாட்கள் முன்னர்
யாழில் மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்

யாழில் மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்

8 மணத்தியாலங்கள் முன்னர்
துரிதகெதியில் புனரமைக்கப்படும் குறிகாட்டுவான் இறங்குதுறை

துரிதகெதியில் புனரமைக்கப்படும் குறிகாட்டுவான் இறங்குதுறை

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check