ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் மமிதா பைஜு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இரண்டு வானம்’
இந்த திரைப்படம் எதிர்வரும் அக்டோபர் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, அக்டோபர் 15ஆம் தேதி ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், அதற்கு அடுத்த வாரம் ‘இரண்டு வானம்’ படத்தை வெளியிடுவதில் திரையரங்குகள் தொடர்பான சிக்கல்கள் ஏற்படலாம் என கூறப்படுகிறது.
இதனால், ‘இரண்டு வானம்’ படத்திற்கான புதிய வெளியீட்டுத் திகதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இதற்கிடையில், இந்தப் படத்தின் OTT உரிமத்தை Netflix நிறுவனம் சுமார் 26 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளது.
எனவே, ‘இரண்டு வானம்’ திரைப்படம் எப்போது திரையரங்குகளில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.











