EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
அமைதிப் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை: யுரேனியம் சுத்திகரிப்பு விவகாரத்தில் முரண்பாடு

அமைதிப் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை: யுரேனியம் சுத்திகரிப்பு விவகாரத்தில் முரண்பாடு

ஐப்பசி 22, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே தொடரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இராஜதந்திர முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் யுரேனியம் சுத்திகரிப்பு விவகாரத்தால் பேச்சுவார்த்தைகளில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் ஈரானின் அணுசக்தித் திட்டத்தைக் காரணங்காட்டி அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்களைத் தொடங்கின.

சுமார் எட்டு மாதங்களாகத் தொடரும் இந்தப் போரினால் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளதோடு, யேமன் உள்ளிட்ட பகுதிகளுக்கும் பதற்றம் பரவியுள்ளது.

முன்னதாக, ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது தொடர்பாக கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் ஈரானின் அணுஆயுத உற்பத்தியைத் தடுப்பது தொடர்பான சரத்துக்கள் இடம்பெற்றிருந்தபோதிலும், 60 நாட்களுக்குள் முழுமையான அமைதி ஒப்பந்தத்தை எட்ட முடியாமல் போனதால் அது செயலற்றதானது.

தற்போது மீண்டும் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ள நிலையில், அணுஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின் (NPT) கீழ் யுரேனியத்தைச் சுத்திகரிப்பது தமது நாட்டின் உரிமை என ஈரான் வலியுறுத்துகிறது.

எனினும், ஈரான் யுரேனியம் சுத்திகரிப்பை முழுமையாக நிறுத்த வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிபந்தனை விதித்துள்ளார்.

இதனிடையே, பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஆசிம் முனீர் இராஜதந்திர மத்தியஸ்தராக டெஹ்ரானுக்கு விஜயம் செய்து, ஈரானின் பாதுகாப்புத் தலைவர் மொஹ்சின் ரெசாய் மற்றும் உயர் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட மொஹ்சின் ரெசாய், ஈரானில் சுத்திகரிக்கப்பட்ட யுரேனியத்தின் ஒரு சிறு துளி கூட நாட்டிற்கு வெளியே கொண்டு செல்லப்பட மாட்டாது என்றும், அது உள்நாட்டுத் தேவைகளுக்கே பயன்படுத்தப்படும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மேலும், அமெரிக்கா விதித்துள்ள துறைமுக முற்றுகையை விலக்குதல், பொருளாதாரத் தடைகளை நீக்குதல் மற்றும் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவித்தல் ஆகிய நிபந்தனைகளை நிறைவேற்றினால் மட்டுமே அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

அதேவேளை, அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஈரானின் அணுசக்தி மையங்கள் அழிக்கப்பட்டுவிட்டதாகவும், அவற்றை மீண்டும் கட்டியெழுப்ப அனுமதிக்கப் போவதில்லை என்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அணுசக்தித் திட்டத்தை மீண்டும் புதுப்பிக்க மாட்டோம் என்ற நீண்டகால உறுதிமொழியை ஈரான் வழங்க வேண்டும் என்பதில் அமெரிக்கா தீவிரமாக உள்ளது.

கத்தார் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அமைதி பேச்சுவார்த்தைக்கு மத்தியஸ்தம் வகித்து வரும் நிலையில், இரு நாடுகளின் முரண்பாடான நிலைப்பாடுகளால் இறுதி உடன்பாட்டை எட்டுவதில் சிக்கல் நீடிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

டெல்லியில் இருந்து சென்னை செல்லவிருந்த இண்டிகோ விமானத்திற்கு மிரட்டல்
உலகம்

டெல்லியில் இருந்து சென்னை செல்லவிருந்த இண்டிகோ விமானத்திற்கு மிரட்டல்

ஐப்பசி 24, 2026
தலைநகர் கீவ் மீது கொத்து வெடிகுண்டுகளை வீசி ரஷ்யா தாக்குதல்: உக்ரைன் குற்றச்சாட்டு!
உலகம்

தலைநகர் கீவ் மீது கொத்து வெடிகுண்டுகளை வீசி ரஷ்யா தாக்குதல்: உக்ரைன் குற்றச்சாட்டு!

ஐப்பசி 24, 2026
பீகாரில் பட்டாசுத் தொழிற்சாலையில் வெடிவிபத்து
உலகம்

பீகாரில் பட்டாசுத் தொழிற்சாலையில் வெடிவிபத்து

ஐப்பசி 24, 2026
இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்து
உலகம்

இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்து

ஐப்பசி 22, 2026
தமிழ்நாடு காவல்துறையில் தமிழுக்கே இடமில்லையா? – திமுக கேள்வி
உலகம்

தமிழ்நாடு காவல்துறையில் தமிழுக்கே இடமில்லையா? – திமுக கேள்வி

ஐப்பசி 22, 2026
நாடாளுமன்ற செங்கோலை வடிவமைத்த உம்மிடி எத்திராஜ் காலமானார்!
உலகம்

நாடாளுமன்ற செங்கோலை வடிவமைத்த உம்மிடி எத்திராஜ் காலமானார்!

ஐப்பசி 22, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

யாழ்ப்பாணத்தில் புதிய மோட்டார் சைக்கிள் பதிவுச் சேவை ஆரம்பம்

யாழ்ப்பாணத்தில் புதிய மோட்டார் சைக்கிள் பதிவுச் சேவை ஆரம்பம்

5 நாட்கள் முன்னர்
வவுனியாவில் 63,235 ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை!

வவுனியாவில் 63,235 ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை!

12 மணத்தியாலங்கள் முன்னர்
அனைத்துத் தமிழ் அரசியல் சக்திகளையும் ஒன்றிணைக்க ரெலோ தீர்மானம்!

அனைத்துத் தமிழ் அரசியல் சக்திகளையும் ஒன்றிணைக்க ரெலோ தீர்மானம்!

6 நாட்கள் முன்னர்
கள்ளப்படகு ஊடாக தமிழகம் சென்ற மூன்று இலங்கையர்கள் கைது

கள்ளப்படகு ஊடாக தமிழகம் சென்ற மூன்று இலங்கையர்கள் கைது

11 மணத்தியாலங்கள் முன்னர்
கேப்பாபிலவில் 6.05 ஏக்கர் காணி விடுவிப்பு

கேப்பாபிலவில் 6.05 ஏக்கர் காணி விடுவிப்பு

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check