மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி தேற்றாத்தீவு மயானத்தில் இருந்து ஆணொருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சடலத்திற்கு அருகாமையில், சமய வழிபாடுகள் இடம்பெற்றதற்கான தடயங்கள் காணப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அங்கு பூஜைகள் இடம் பெற்றிருப்பதாகவும் சில வேலைகளில் அங்கு நரபலி பூஜைகள் இடம்பெற்று இருக்கலாம் என்று பொலிசார் சந்தேகப்படுகின்றனர்











