EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
செம்மணி இடைக்கால அறிக்கை குறித்து சுரேஷ் பிரேமச்சந்திரன் அதிருப்தி

செம்மணி இடைக்கால அறிக்கை குறித்து சுரேஷ் பிரேமச்சந்திரன் அதிருப்தி

ஐப்பசி 22, 2026
வகை: இலங்கை, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

செம்மணி மனித புதைகுழி தொடர்பாகப் பேராசிரியர் ராஜ்சோமதேவா யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள இடைக்கால அறிக்கை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமைந்துள்ளதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், தற்போதைய அரசாங்கமும் முந்தைய ஆட்சியாளர்களையும் சம்பவத்துடன் நேரடி தொடர்புள்ள படைத்தரப்பினரையும் காப்பாற்றவே முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

2025ஆம் ஆண்டின் பிற்பகுதியிலும் 2026ஆம் ஆண்டிலும் 110 நாட்களாக செம்மணியில் அமைந்துள்ள சிந்துபாத்தி என்ற இடத்தில் பல மனிதர்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அகழ்வாராய்ச்சி நடைபெற்றதாகவும், அப்போது 583 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அகழ்தல் பணி இன்னும் முற்றுப்பெறாத நிலையில், அதனைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை யாழ்ப்பாணம் நீதிமன்றம் மேற்கொள்ளும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் ராஜ்சோமதேவாவால் கையளிக்கப்பட்ட அறிக்கையில், இந்த மரணங்கள் இயற்கை அனர்த்தத்தால் அல்லது மிகப்பெரிய தொற்றுநோயால் ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ள விடயங்கள், இவ்விவகாரம் மூடிமறைக்கப்படலாம் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

யாழ் மாவட்டத்தில் சுனாமிக்குப் பின் கடற்கரைகளிலேயே இறந்தவர்கள் புதைக்கப்பட்டதாகவும், கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்கள் பற்றிய விவரங்கள் அரசாங்கத்திடம் அறிக்கைகளாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அவர், சிந்துபாத்தி பகுதி கிறிஸ்தவ மயானமும் அல்ல என்றும், தமிழ் மக்கள் இயற்கையாகவோ அல்லது தொற்றாலோ இறந்திருந்தால் இறுதிக்கிரியைகளின் பின் எரிக்கப்பட்டிருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த யுத்தத்தில் 25,000 பேருக்குமேல் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும், அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் பலவற்றில் சன்னங்கள் பட்ட காயங்களும் வெட்டுக்காயங்களும் இருப்பதாக ஏற்கனவே ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், சர்வதேச சமுதாயத்தின் மத்தியில் இனப்படுகொலைகள் இடம்பெறவில்லை என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறதா என்ற கேள்வி எழுவதாகவும், செம்மணியில் புதைக்கப்பட்டவர்களுக்கான நீதி கிடைக்க சர்வதேச விசாரணை ஒன்றின் ஊடாகவே சாத்தியம் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

திருகோணமலையில் தந்தையைக் கொலை செய்த மகன்: மரண தண்டனை விதித்து மேல் நீதிமன்றம் தீர்ப்பு!
அண்மைய செய்திகள்

திருகோணமலையில் தந்தையைக் கொலை செய்த மகன்: மரண தண்டனை விதித்து மேல் நீதிமன்றம் தீர்ப்பு!

ஐப்பசி 22, 2026
யாழில் மகள் காணாமல் போனதாக முறைப்பாடு: 22 நாட்களாகியும் தகவல்கள் இல்லை!
இலங்கை

யாழில் மகள் காணாமல் போனதாக முறைப்பாடு: 22 நாட்களாகியும் தகவல்கள் இல்லை!

ஐப்பசி 22, 2026
தியாக தீபத்தின் சிலை விவகாரம்: மாநகர சபை முதல்வரிடம் விசாரணை!
அண்மைய செய்திகள்

தியாக தீபத்தின் சிலை விவகாரம்: மாநகர சபை முதல்வரிடம் விசாரணை!

ஐப்பசி 22, 2026
இணுவில் பகுதியில் டிப்பர் மோதி முதியவர் பலி!
இலங்கை

இணுவில் பகுதியில் டிப்பர் மோதி முதியவர் பலி!

ஐப்பசி 22, 2026
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

ஐப்பசி 21, 2026
கோதுமை மா விலை உயர்வு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
அண்மைய செய்திகள்

கோதுமை மா விலை உயர்வு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

ஐப்பசி 21, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

தியாக தீபத்தின் சிலை விவகாரம்: மாநகர சபை முதல்வரிடம் விசாரணை!

தியாக தீபத்தின் சிலை விவகாரம்: மாநகர சபை முதல்வரிடம் விசாரணை!

1 மணத்தியாலம் முன்னர்
வவுனியா மாநகர சபை உறுப்பினருக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு

வவுனியா மாநகர சபை உறுப்பினருக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு

2 நாட்கள் முன்னர்
யாழ். அரியாலை பகுதியில் பெருமளவான  துப்பாக்கி ரவைகள் மீட்பு

யாழ். அரியாலை பகுதியில் பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்பு

2 நாட்கள் முன்னர்
மின் விநியோகக் கட்டமைப்பை மீண்டும் சீரமைப்பதே எங்களின் முக்கிய பணியாகும் – நலிந்த ஜெயதிஸ்ஸ

மின் விநியோகக் கட்டமைப்பை மீண்டும் சீரமைப்பதே எங்களின் முக்கிய பணியாகும் – நலிந்த ஜெயதிஸ்ஸ

2 நாட்கள் முன்னர்
விபத்தில் மூளைச்சாவடைந்த தாயின் சிறுநீரகங்கள் தானம் – இருவருக்கு மறுவாழ்வு

விபத்தில் மூளைச்சாவடைந்த தாயின் சிறுநீரகங்கள் தானம் – இருவருக்கு மறுவாழ்வு

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check