யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் இணுவில் பகுதியில் வியாழக்கிழமை (22.10.2026) இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இணுவில் பகுதியைச் சேர்ந்த கணேசன் பழனிலிங்கம் (வயது 67) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
குறித்த முதியவர் வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில், பின்னால் வந்த டிப்பர் வாகனம் அவர் மீது மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தின் தீவிரத்தினால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்துச் சம்பவத்தைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சுன்னாகம் பொலிஸார், சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.











