EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
Pornhub தாய் நிறுவனத்திற்கு எதிராகக் கூட்டு வழக்கு – கியூபெக் நீதிமன்றம் அனுமதி!

Pornhub தாய் நிறுவனத்திற்கு எதிராகக் கூட்டு வழக்கு – கியூபெக் நீதிமன்றம் அனுமதி!

ஐப்பசி 23, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

போர்ன்ஹப் (Pornhub) இணையதளத்தின் தாய் நிறுவனமான ‘ஐலோ’ (Aylo)  நிறுவனத்திற்கு எதிராக கூட்டு வழக்கை (Class Action) தொடர கியூபெக் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஒப்புதலின்றி வெளியிடப்பட்ட அந்தரங்க மற்றும் பாலியல் வன்கொடுமை காணொளிகளால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில், இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கியூபெக் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள இந்த அனுமதியானது, உலகம் முழுவதும் உள்ள பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான நபர்கள் நீதி கோரி, நீதிமன்றத்தை அணுக வழிவகுத்துள்ளது.

கடந்த பல ஆண்டுகளாகவே போர்ன்ஹப் இணையதளத்தில் பயனர்களால் பதிவேற்றப்படும் காணொளிகளின் பாதுகாப்பு மற்றும் முறையான கட்டுப்பாடுகள் குறித்து பல்வேறு தரப்பினரும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்துள்ளனர்.

அனுமதி இன்றிப் பதிவு செய்யப்பட்ட மற்றும் பகிரப்பட்ட ஆபாசக் காணொளிகளால் தங்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் தனியுரிமை மீறல்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று பாதிக்கப்பட்டோர் கோருகின்றனர்.

குறிப்பாக, சிறுவயதில் தனக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைக் காட்சிகள் இணையத்தில் அனுமதியின்றிப் பகிரப்பட்டதாக ஒன்ராறியோவைச் சேர்ந்த பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டோரின் ஒப்புதலின்றி இணையத்தில் பதிவேற்றப்படும் சட்டவிரோதக் காணொளிகளைத் தடுத்து அகற்றுவதில் போர்ன்ஹப் நிறுவனத்தின் நிர்வாகம் தவறிவிட்டதாகவும், அத்தகைய உள்ளடக்கங்கள் மூலம் அந்நிறுவனம் லாபம் ஈட்டியுள்ளதாகவும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.

கியூபெக் உயர் நீதிமன்றத்தினால் கூட்டு வழக்குக்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, உலகளாவிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இவ்வழக்கில் தங்களை இணைத்துக்கொள்ளவும், முறையான இழப்பீடு கோரவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத் தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்கில் 18 வயது இளைஞரை காணவில்லை: பொலிஸார் உதவி கோரிக்கை!
கியூபெக்

கியூபெக்கில் 18 வயது இளைஞரை காணவில்லை: பொலிஸார் உதவி கோரிக்கை!

ஐப்பசி 24, 2026
கியூபெக்கில் வீடற்ற மக்களுக்கு 28 மில்லியன் டொலர் அவசர நிதி!
கியூபெக்

கியூபெக்கில் வீடற்ற மக்களுக்கு 28 மில்லியன் டொலர் அவசர நிதி!

ஐப்பசி 24, 2026
கியூபெக் ஷாம்ப்ளைன் தொகுதியில் கன்சர்வேட்டிவ் கட்சியின் வெற்றி உறுதி!
கியூபெக்

கியூபெக் ஷாம்ப்ளைன் தொகுதியில் கன்சர்வேட்டிவ் கட்சியின் வெற்றி உறுதி!

ஐப்பசி 24, 2026
கியூபெக் கன்சர்வேடிவ் உறுப்பினர்கள் தவறு செய்யலாம் – எரிக் டுஹைம்
கியூபெக்

கியூபெக் கன்சர்வேடிவ் உறுப்பினர்கள் தவறு செய்யலாம் – எரிக் டுஹைம்

ஐப்பசி 23, 2026
கியூபெக்கில் 738 பேரின் பழங்குடி அந்தஸ்து ரத்து
கியூபெக்

கியூபெக்கில் 738 பேரின் பழங்குடி அந்தஸ்து ரத்து

ஐப்பசி 23, 2026
கியூபெக்கில் மேப்பிள் சிரப் கையிருப்பு தீரும் அபாயம்!
கியூபெக்

கியூபெக்கில் மேப்பிள் சிரப் கையிருப்பு தீரும் அபாயம்!

ஐப்பசி 23, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

வசாவிளான் மக்களின் காணி மீட்புப் போராட்டம் ஆறாவது வாரமாகத் தொடர்கிறது!

வசாவிளான் மக்களின் காணி மீட்புப் போராட்டம் ஆறாவது வாரமாகத் தொடர்கிறது!

6 நாட்கள் முன்னர்
யாழ். அரியாலை பகுதியில் பெருமளவான  துப்பாக்கி ரவைகள் மீட்பு

யாழ். அரியாலை பகுதியில் பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்பு

4 நாட்கள் முன்னர்
யாழில் உள்ள டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் சிஐடி சோதனை

யாழில் உள்ள டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் சிஐடி சோதனை

5 நாட்கள் முன்னர்
வடமாகாண ஆளுநரைச் சந்தித்த மேஜர் ஜெனரல் வீரக்கோன்!

வடமாகாண ஆளுநரைச் சந்தித்த மேஜர் ஜெனரல் வீரக்கோன்!

20 மணத்தியாலங்கள் முன்னர்
கண்டியில் 42 மணி நேர நீர் விநியோகத் தடை – பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

கண்டியில் 42 மணி நேர நீர் விநியோகத் தடை – பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check