நாட்டிலுள்ள 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், அந்த எச்சரிக்கை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிருவாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதில் கேகாலை, கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, மாத்தளை, களுத்துறை, கம்பஹா, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கு எசமண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்களை அவதானத்தோடு செயற்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.











