நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்மன்’ படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
நயன்தாராவின் கண்களைக் கொண்ட போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அவர் இப்படத்தில் இணைந்துள்ளதை தயாரிப்பு நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
அஸ்வத் மாரிமுத்து இயக்கும் இப்படத்தை உலகநாயகன் கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மரிக் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தில் ஏற்கனவே தெலுங்கு நடிகர் ராம் பொதினேனி, ஸ்ரீலீலா, சிம்ரன், ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைகள் இணைந்து நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை நயன்தாராவும் இப்படத்தில் இணைந்துள்ளது படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
மேலும், நடிகர் ரஜினிகாந்தும் நயன்தாராவும் இணையும் 6வது படம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.











