EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
மட்டக்களப்பில் ஹெரோயின் வைத்திருந்த நபருக்கு 7 ஆண்டுகள் சிறை!

மட்டக்களப்பில் ஹெரோயின் வைத்திருந்த நபருக்கு 7 ஆண்டுகள் சிறை!

ஐப்பசி 29, 2026
வகை: இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பில் 1.147 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் வாழைச்சேனையைச் சேர்ந்த 29 வயதுடைய முகமது றிஸ்வி என்பவருக்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் தீர்ப்பளித்துள்ளார்.

அத்துடன், அவருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், அதனைச் செலுத்தத் தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு 1.147 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் குறித்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அதனையடுத்து வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், 2022ஆம் ஆண்டு இவ்வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வந்தன.

வழக்குத் தொடுநர் சார்பில் அரச சட்டவாதிகளான எஸ். அனுஷாங்கன் மற்றும் ரி. தர்சிகா ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில், குறித்த நபர் குற்றவாளியாக நீதிமன்றத்தினால் கடந்த 14ஆம் திகதி (2026-10-14) இனங்காணப்பட்டு, தண்டனைத் தீர்ப்பு அக்டோபர் 29ஆம் திகதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதனடிப்படையில், ஹெரோயின் போதைப்பொருள் தன்வசம் வைத்திருந்த முதலாவது குற்றத்திற்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும், ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தைச் செலுத்தத் தவறினால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க கட்டளையிடப்பட்டது.

அதேவேளை, ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்ததாக சாட்டப்பட்ட இரண்டாவது குற்றச்சாட்டிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டதாக மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் தனது தீர்ப்பில் கட்டளையிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

அப்புத்தளையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்!
இலங்கை

அப்புத்தளையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்!

ஐப்பசி 29, 2026
யாழில் தேசிய தூய்மை தின நிகழ்ச்சித்திட்டம் சனிக்கிழமை முன்னெடுப்பு!
இலங்கை

யாழில் தேசிய தூய்மை தின நிகழ்ச்சித்திட்டம் சனிக்கிழமை முன்னெடுப்பு!

ஐப்பசி 29, 2026
ஆபத்தான நீர்நிலைகள் குறித்து அவதானம் தேவை: யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர்!
இலங்கை

ஆபத்தான நீர்நிலைகள் குறித்து அவதானம் தேவை: யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர்!

ஐப்பசி 29, 2026
வடக்கில் முதலீட்டாளர்களின் சிக்கல்களைக் குறைக்க முத்தரப்பு ஒப்பந்தம் கைச்சாத்து!
இலங்கை

வடக்கில் முதலீட்டாளர்களின் சிக்கல்களைக் குறைக்க முத்தரப்பு ஒப்பந்தம் கைச்சாத்து!

ஐப்பசி 29, 2026
கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்ட நபர் விடுவிப்பு!
இலங்கை

கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்ட நபர் விடுவிப்பு!

ஐப்பசி 29, 2026
யாழில் ஜனவரி இடம்பெறவுள்ள வடக்கு ஏற்றுமதியாளர்கள் மாநாடு!
இலங்கை

யாழில் ஜனவரி இடம்பெறவுள்ள வடக்கு ஏற்றுமதியாளர்கள் மாநாடு!

ஐப்பசி 29, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

மீன் உற்பத்தி தொடர்பில் விசேட கலந்துரையாடல் முன்னெடுப்பு

மீன் உற்பத்தி தொடர்பில் விசேட கலந்துரையாடல் முன்னெடுப்பு

2 நாட்கள் முன்னர்
மன்னாரில் 65 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைப்பு

மன்னாரில் 65 குடும்பங்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கி வைப்பு

1 நாள் முன்னர்
கிளிநொச்சியில் குப்பைகளைக் கொட்டுவோருக்கு 10 இலட்சம் ரூபாய் வரை அபராதம்!

கிளிநொச்சியில் குப்பைகளைக் கொட்டுவோருக்கு 10 இலட்சம் ரூபாய் வரை அபராதம்!

5 நாட்கள் முன்னர்
இலங்கைக்கு கடத்த முயன்ற 2 லட்சம் மாத்திரைகள் தமிழகத்தில் பறிமுதல்!

இலங்கைக்கு கடத்த முயன்ற 2 லட்சம் மாத்திரைகள் தமிழகத்தில் பறிமுதல்!

5 நாட்கள் முன்னர்
நெடுந்தீவுக்கான மூன்று அரச படகுகளும் பழுது – போக்குவரத்தில் கடும் நெருக்கடி

நெடுந்தீவுக்கான மூன்று அரச படகுகளும் பழுது – போக்குவரத்தில் கடும் நெருக்கடி

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check