ஹாலிஎல பகுதியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, பாறைகள் சரிந்து வீடொன்று சேதமடைந்துள்ளதுடன், மேலும் எட்டு வீடுகளைச் சேர்ந்த குடும்பங்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஹாலிஎல, ஊதுவரை 7ஆம் மைல்கல், நவகொலனி பகுதியில் இன்று (30) பெய்த கனமழையுடன் மலையிலிருந்து பாறைகள் சரிந்து வீடொன்றின் மீது விழுந்துள்ளன. இதனால் குறித்த வீடு சேதமடைந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் மேலும் மண்சரிவு மற்றும் பாறைகள் சரியும் அபாயம் காணப்படுவதால், ஆபத்தை எதிர்நோக்கியுள்ள எட்டு வீடுகளைச் சேர்ந்த குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஹாலிஎல பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் பதுளை மாவட்ட தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவக அதிகாரிகள் இணைந்து இந்த வெளியேற்ற நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.











