சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து முதலமைச்சர் விஜய் தலைமையில் உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைப் பலப்படுத்துவது குறித்தும், குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தத் தேவையான துரித நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
இக்கூட்டத்தைத் தொடர்ந்து, காவல்துறை டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் மற்றும் உளவுத்துறை ஐஜி அஸ்ரா கார்க் ஆகியோர் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்துப் பேசினர்.
இச்சந்திப்பின் போது, தமிழ்நாடு மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்த விரிவான அறிக்கையை அவர்கள் முதலமைச்சரிடம் சமர்ப்பித்தனர்.
அண்மையில் தீபாவளிப் பண்டிகையை ஒட்டி இடம்பெற்ற சில விரும்பத்தகாத சம்பவங்கள் மற்றும் கொலை வழக்குகள் தொடர்பாக, தமிழக முதலமைச்சர் விஜய் ஏற்கனவே அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.











