EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
Mullaithevu தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகள்  சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

Mullaithevu தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகள் சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ரவிகரன் குற்றச்சாட்டு

ஆனி 17, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

முல்லைத்தீவு மாவட்டத்தில் மணலாறு என்ற இடம் வெலிஓயாவாக மாற்றம் செய்யப்பட்டு தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளை அபகரித்து 4238 சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 3389 தமிழ் குடும்பங்களுக்கு காணி இல்லை என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவில் இன்றையதினம் (17.06.2024) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

வடமாகாணத்திலே 2415 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்புள்ள மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டம். கிட்டத்தட்ட 5 இலட்சத்து தொண்ணூறாயிரம் ஏக்கர் நிலப்பரப்பை கொண்டதாக கணிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 3389 குடும்பங்களுக்கு காணி இல்லை.
ஏற்கனவே விடுதலைபுலிகள் மௌனிக்கப்பட்ட காலங்களிற்கு பின்னர் பூர்விகமான மணலாறு என்ற இடம் வெலிஓயாவாக மாற்றம் செய்து. 4238 சிங்கள குடும்பங்களுக்கு காணிகள் வழங்கி வீட்டு வசதிகளும் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்கள். அரசாங்கம் தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளை அபகரித்தே வழங்கியிருக்கிறார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 47455 மொத்த குடும்பங்களும், 140931 மக்கள் தொகையாக காணப்படுகின்றது. இதில் தமிழர்களுடைய பூர்வீக இடங்களில் 4557 குடியமர்த்தப்பட்ட சிங்கள குடும்பங்களை சேர்ந்த 12545 பேரும், முஸ்லீம் மக்களாக 1675 குடும்பங்களை சேர்ந்த 6382 பேரும் தமிழ் மக்களாக 41210 குடும்பங்களை சேர்ந்த 121799 பேருமாக காணப்படுகிறார்கள்.

குறிப்பிட்டு கூறக்கூடிய விடயம் என்னவெனில் தமிழ் மக்களுக்கு சொந்தமாக இருந்த பூர்வீகமான நீர்ப்பாசன குளங்கள் அதனோடு சேர்ந்த காணிகள் அனைத்தும் அபகரிக்கப்பட்டு 4557 குடும்பங்களில் பல குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

இதில் ஆமையன்குளம், முந்திரிகைகுளம், மறிச்சுக்கட்டி குளம் ஆகிய குளங்களையும் அதனோடு இணைந்த நிலப்பரப்புகளையும் அபகரித்தே சிங்கள மக்களுக்கு வழங்கி தமிழ் மக்கள் தமது சொந்த நிலங்களையும், குளங்களையும் ஏக்கத்தோடு பார்த்து கொண்டிருக்கும் நிலமையை ஆட்சியாளர்கள் கொக்குத்தொடுவாய் , கொக்குளாய், கருநாட்டுக்கேணி மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளார்கள்.

இதுதவிர 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 28676 இளைஞர், யுவதிகள் தமக்கு ஒரு ஏக்கர் காணி வீதம் தருமாறு விண்ணப்பித்த ஒரு நடவடிக்கை இருக்கின்றது. அரசாங்கமே விண்ணப்பிக்குமாறு அறிவித்தல் வழங்கியிருந்தார்கள். ஆனால் இன்று வரைக்கும் அவர்களுக்கான எதுவித காணிகளும் வழங்கப்படவில்லை. அதற்கான முயற்சிகளும் நடக்கவில்லை என மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

காசா நகரின் துஃபா (Tuffah district)இன் கனேடிய வீரர்கள் புதைக்கப்பட்டிருந்த பகுதி முற்றாகத் தகர்ப்பு.
அண்மைய செய்திகள்

காசா நகரின் துஃபா (Tuffah district)இன் கனேடிய வீரர்கள் புதைக்கப்பட்டிருந்த பகுதி முற்றாகத் தகர்ப்பு.

ஆனி 25, 2026
‘பில்டிங் கனடா சட்டத்தின்’ கீழ் ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியில் ஆழ்கடல் துறைமுகம் ஒன்றை நிர்மாணிக்க மத்திய அரசு திட்டம்
அண்மைய செய்திகள்

‘பில்டிங் கனடா சட்டத்தின்’ கீழ் ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியில் ஆழ்கடல் துறைமுகம் ஒன்றை நிர்மாணிக்க மத்திய அரசு திட்டம்

ஆனி 25, 2026
கியூபெக்கை தனி நாடாக்குவதற்கான ‘புளூ புக்'(Blue Book) திட்ட வழிகாட்டியை வெளியிட்ட பார்டி கியூபெகோயிஸ் கட்சி!
அண்மைய செய்திகள்

கியூபெக்கை தனி நாடாக்குவதற்கான ‘புளூ புக்'(Blue Book) திட்ட வழிகாட்டியை வெளியிட்ட பார்டி கியூபெகோயிஸ் கட்சி!

ஆனி 25, 2026
கியூபெக் மாகாண பொதுத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ ஆங்கில மொழி நேரடி விவாதம் முற்றாக ரத்து!
அண்மைய செய்திகள்

கியூபெக் மாகாண பொதுத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ ஆங்கில மொழி நேரடி விவாதம் முற்றாக ரத்து!

ஆனி 25, 2026
மொன்றியல் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து விவாதிக்கப்படும்  ‘இன்செல்'(Incel) இணையக் கலாசாரம் மீதான ஆய்வுகள் தீவிரம்!
அண்மைய செய்திகள்

மொன்றியல் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து விவாதிக்கப்படும் ‘இன்செல்'(Incel) இணையக் கலாசாரம் மீதான ஆய்வுகள் தீவிரம்!

ஆனி 25, 2026
மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வடை தயாரிப்பு நிலையம் மூடல்
அண்மைய செய்திகள்

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வடை தயாரிப்பு நிலையம் மூடல்

ஆனி 23, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

மட்டக்களப்பில் தியாகிகள் தினநினைவேந்தல்

மட்டக்களப்பில் தியாகிகள் தினநினைவேந்தல்

5 நாட்கள் முன்னர்
யாழில். அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதில் கடும் சவால் –  கடற்தொழில் அமைச்சர்

யாழில். அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதில் கடும் சவால் – கடற்தொழில் அமைச்சர்

5 நாட்கள் முன்னர்
மொன்றியலில் ஆயுதம் ஏந்திய சந்தேக நபர் – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மொன்றியலில் ஆயுதம் ஏந்திய சந்தேக நபர் – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

3 நாட்கள் முன்னர்
வவுனியா மாநகரசபை அமர்வில் குழப்பநிலை – சபை அமர்வு ஒத்திவைப்பு

வவுனியா மாநகரசபை அமர்வில் குழப்பநிலை – சபை அமர்வு ஒத்திவைப்பு

3 நாட்கள் முன்னர்
மட்டக்களப்பில் விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டம்

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In