சேவை யாப்பு உள்ளிட்ட தமது கோரிக்கைகள் தொடர்பில் தீர்க்கமான கலந்துரையாடல் இன்று (01) இடம்பெறவுள்ளதாக அரச கிராம உத்தியோகத்தர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலணியின் பிரதானி சாகல ரத்நாயக்கவுடன் இந்த கலந்துரையாடல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் தேசிய அமைப்பாளர் சுமித் கொடிகார தெரிவித்தார்.
தமது கோரிக்கைகளுக்கு உரிய கலந்துரையாடலின் ஊடாக தமது பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு கிடைக்காவிட்டால் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சேவை யாப்பில் மறுசீரமைப்புகளை கோரியுள்ள இலங்கை கிராம சேவையாளர்கள் சங்கம் அது தொடர்பில் இன்றைய தினம் தீர்க்கமான கூட்டமொன்றை நடத்த தீர்மானித்துள்ளது. ஜனாதிபதியின் பணிக்குழு பிரதானி சாகல ரத்னாயக்கவுடன் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக சங்கத்தின் தலைவர் சுமித் கொடிகார தெரிவித்துள்ளார்.











