வவுனியா இறம்பைக்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் ஓருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா மடுக்கந்தை பகுதியில் இருந்து வவுனியா நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் முந்திச் செல்ல முற்பட்ட போது எதிரே வந்த காரில் மோதியதுடன், அருகில் சென்ற விமானப்படையின் வாகனத்திலும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிள் சாரதி காயங்களுக்குள்ளானதுடன் அவருடன் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.