வவுனியாவில் ‘கலாநேத்ரா’ விருதுக்கான விண்ணப்பங்கள் கோரல்
வவுனியா பிரதேச செயலகமும் கலாசார பேரவையும் இணைந்து வழங்கும் ‘கலாநேத்ரா’ விருதுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
வவுனியா பிரதேச செயலகப் பிரிவில் நிரந்தர பதிவை கொண்டு இருப்பதுடன் 25 வயதுக்கு மேற்பட்டவராக விண்ணப்பதாரி இருக்க வேண்டும்.
இதேவேளை பிரதேச விருது பெற்ற கலைஞர்கள் மீளவும் விண்ணப்பிக்க முடியாது எனவும் பிரதேச செயலாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்னர் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்களிடம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு பின்னர் வரும் எந்த விண்ணப்பங்களும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது எனவும் கூறப்பட்டுள்ளது.
குறித்த விருதுக்கு சிறுகதை, கவிதை, நாவல், கட்டுரை, நாடக எழுத்துரு, இசை, மரபணுக்கலை, நாடகாற்றுகை, சிற்பம், ஓவியம், பரதம், வாத்திய இசை, குறும்படம், இயல், அறிவிப்பு, மரபு இசை, ஊடகம் ஆகிய 17 துறைகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.