ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவுற்ற நிலையில் நீதியானதும் நியாயமானதுமான தேர்தலை நிறைவு செய்வதற்காக பல தரப்பினரும் முனைப்போடு செயட்படுகின்றனர்.
இதன்படி தேர்தல் நடவடிக்கையை முன்னெடுப்பதற்காக 83 000 காவல் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை பிரதி பொலிஸ் அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
மேலும் 3000 இறக்கும் அதிகமான சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களும், 2500 பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஏதேனும் முறைப்பாடுகள் வழங்குவதற்க்கு 119, 107 அல்லது 118 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு முறைப்பாட்டை அறிவிக்குமாறு காவல்துறைமா அதிபர் தெரிவித்துள்ளார்.