எல்ல ரயில் நிலைய வனப்பகுதியில் இன்று திடீரென தீப்பரவியதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஈ.எம்.எல்.உதயகுமார தெரிவித்தார். இந்த காட்டுப்பகுதிக்கு யாரேனும் தீ வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எல்ல ரயில் நிலையத்துக்கருகில் உள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட தீ, உதர ரயில் பாதையின் எல்ல நிலையத்துக்கு அருகாமையில் இருந்த ரயில் பாதையான தெமோதர வானளாவிய வளைவு பாலம் நோக்கி பரவியதாகவும் ரயில் ஊழியர்கள் மற்றும் அருகிலுள்ள கிராம மக்கள் ஒன்றிணைந்து தீயை அணைத்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.