EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
இருப்பை பாதுகாக்க தமிழ்க்கட்சிகள் அணிதிரளுங்கள்- சிவமோகன் அழைப்பு!

இருப்பை பாதுகாக்க தமிழ்க்கட்சிகள் அணிதிரளுங்கள்- சிவமோகன் அழைப்பு!

புரட்டாதி 26, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

எதிர்வரும் தேர்தலில் சகலகட்சிகளும் ஒற்றுமை என்று சொல்லி காலத்தை வீணடிக்காமல் தமிழ்தேசியக்கூட்டமைப்பாக தமிழரசுக்கட்சியின் வீட்டு சின்னத்தில் ஒன்றாக போட்டியிடவேண்டும். என்று முன்னாள் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார்.

வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…..:

எதிர்வரும் பொதுத்தேர்தலானது தமிழர்களின் ஒன்றுமையை வலுப்படுத்தி இருப்பை காக்கவேண்டிய ஒரு தேர்தல். அந்த ஒற்றுமையை வலியுறுத்தும் வண்ணம் முன்னாள் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் என 11 பேர் நேற்றைய தினம் மாவைசேனாதிராஜாவை சந்தித்து கலந்துரையாடினோம்.

சகல கட்சிகளையும் உள்வாங்கி தமிழ்தேசிய கூட்டமைப்பாக தமிழ்த்தேசிய அணியாக செயற்ப்படுவதனைவலியுறுத்தியே அந்தக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

எனவே அனைத்து கட்சிகளும் ஒற்றுமை என்று சொல்லி காலத்தை வீணடிக்காமல் தமிழ்த்தேசியகூட்டமைப்பாக தமிழரசுக்கட்சியின் வீட்டு சின்னத்தில் ஒன்றாக போட்டியிடவேண்டும். இது எனது சொந்த கருத்தாக இருந்தாலும் தமிழரசுக்கட்சியின் அதிகமானோரது நிலைப்பாடும் இதுவே.

இது தொடர்பான இறுதி முடிவினை எமது கட்சியின் மத்தியகுழு விரைவில் எடுக்கும். அதன்பின்னர் மாவை சேனாதிராஜா அவர்கள் ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுத்து அதனை எமது மத்தியகுழுவிற்கு அறிவிப்பார். மிக குறுகியகாலமே எமக்கு உள்ளது. எனவே விவேகமாக சிந்திக்கவேண்டும். பிரிந்து நின்று தேர்தலினைச்சந்தித்தால் தமிழர்களது இருப்பு கேள்விக்குறியாக்கப்படும்..

பாராளுமன்றுக்கு புதியவர்கள் தேவை இளைஞர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும் என்பதுஉண்மை. அதேநேரம் பாராளுமன்றில் தமிழ்த்தேசிய இருப்பை தக்கவைப்பதற்கு ஆளுமையான அனுபவமுடைய மூத்தவர்களும் தேவை.

கடந்த காலங்களில் பங்காளிகட்சிகளுக்கு வன்னிமாவட்டத்தில் அதிகமான ஆசனங்கள் கொடுக்கப்பட்டு யாழ்மாவட்டத்தில் கொடுக்கப்படாத நிலமை இருந்தது. அதனை ஒற்றுமையாகவே நாம் செய்தோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு கட்சிகள் மேலோங்கி இருக்கிறது. அது ஒரு தீர்க்கப்படமுடியாத பிரச்சனை அல்ல.

அத்துடன் தமிழர்களது விடயங்களை முன்னிலைப்படுத்தி கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல் தமிழ்மக்களுக்கு தேவையான விடயங்களில் அரசாங்கத்துடன் இணங்கி செல்லவேண்டிய நிலைமையும் ஏற்படும் அது தொடர்பாக பரிசீலிப்போம்.

இதேவேளை மதுபானநிலையத்திற்கான அனுமதிப்பத்திரத்தை தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொண்டனர் என்ற குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களை இதுவரை நான் பார்க்கவில்லை. அது இன்றுவரை எமது கைகளில் கிடைக்கவில்லை. என்றார்.

தொடர்புடைய செய்திகள்

காசா நகரின் துஃபா (Tuffah district)இன் கனேடிய வீரர்கள் புதைக்கப்பட்டிருந்த பகுதி முற்றாகத் தகர்ப்பு.
அண்மைய செய்திகள்

காசா நகரின் துஃபா (Tuffah district)இன் கனேடிய வீரர்கள் புதைக்கப்பட்டிருந்த பகுதி முற்றாகத் தகர்ப்பு.

ஆனி 25, 2026
‘பில்டிங் கனடா சட்டத்தின்’ கீழ் ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியில் ஆழ்கடல் துறைமுகம் ஒன்றை நிர்மாணிக்க மத்திய அரசு திட்டம்
அண்மைய செய்திகள்

‘பில்டிங் கனடா சட்டத்தின்’ கீழ் ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியில் ஆழ்கடல் துறைமுகம் ஒன்றை நிர்மாணிக்க மத்திய அரசு திட்டம்

ஆனி 25, 2026
கியூபெக்கை தனி நாடாக்குவதற்கான ‘புளூ புக்'(Blue Book) திட்ட வழிகாட்டியை வெளியிட்ட பார்டி கியூபெகோயிஸ் கட்சி!
அண்மைய செய்திகள்

கியூபெக்கை தனி நாடாக்குவதற்கான ‘புளூ புக்'(Blue Book) திட்ட வழிகாட்டியை வெளியிட்ட பார்டி கியூபெகோயிஸ் கட்சி!

ஆனி 25, 2026
கியூபெக் மாகாண பொதுத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ ஆங்கில மொழி நேரடி விவாதம் முற்றாக ரத்து!
அண்மைய செய்திகள்

கியூபெக் மாகாண பொதுத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ ஆங்கில மொழி நேரடி விவாதம் முற்றாக ரத்து!

ஆனி 25, 2026
மொன்றியல் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து விவாதிக்கப்படும்  ‘இன்செல்'(Incel) இணையக் கலாசாரம் மீதான ஆய்வுகள் தீவிரம்!
அண்மைய செய்திகள்

மொன்றியல் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து விவாதிக்கப்படும் ‘இன்செல்'(Incel) இணையக் கலாசாரம் மீதான ஆய்வுகள் தீவிரம்!

ஆனி 25, 2026
மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வடை தயாரிப்பு நிலையம் மூடல்
அண்மைய செய்திகள்

மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வடை தயாரிப்பு நிலையம் மூடல்

ஆனி 23, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

மொண்ட்ரியல் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசாரணை – குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை

மொண்ட்ரியல் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசாரணை – குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை

5 நாட்கள் முன்னர்
யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்யுங்கள் – சீ.வி.கே சிவஞானம்

யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நடராஜர் சிலையை பிரதிஷ்டை செய்யுங்கள் – சீ.வி.கே சிவஞானம்

1 நாள் முன்னர்
தர்மபுரம் பகுதியில் திறந்து வைக்கப்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலை

தர்மபுரம் பகுதியில் திறந்து வைக்கப்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலை

2 நாட்கள் முன்னர்
வெற்றிலைக்கேணியில் வெடிமருந்துடன் கைதான கடற்தொழிலாளர்

வெற்றிலைக்கேணியில் வெடிமருந்துடன் கைதான கடற்தொழிலாளர்

1 நாள் முன்னர்
பிரெஞ்சு மொழிச்சாசனத்தை மீறி, ஆங்கிலத்தில் விலைப்பட்டியல்களை வழங்கிய நிறுவனத்திற்கு அதிரடி அபராதம்.

பிரெஞ்சு மொழிச்சாசனத்தை மீறி, ஆங்கிலத்தில் விலைப்பட்டியல்களை வழங்கிய நிறுவனத்திற்கு அதிரடி அபராதம்.

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In