“இன்று நாம் உணவு பற்றி நிறைய பேசுகிறோம். ஆரோக்கியமான உணவு என்ற தேடல் ஒரு புறம். எது சுவையான உணவு என்ற தேடல் இன்னொரு புறம். சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு இந்தத் தேடலின் எல்லை விரிந்துவிட்டது. எந்த ஊரில் எந்தச் சுவையில் உணவுகள் கிடைக்கின்றன என்று தேடுகிறார்கள். முன்பெல்லாம் வீட்டில் உணவுகளைச் சமைக்க முடியாத, தவிர்க்க முடியாத சூழலில் உணவகங்களுக்குச் செல்வார்கள். இன்று சாப்பிடுவதற்காகவே பல ஊர்களுக்குப் பயணிக்கிறார்கள்.
முடிந்தளவு ஆரோக்கியம் நிறைந்த காய்கறிகளை, பழங்களை வீட்டிலே தயார் செய்து உண்ணுவதே சாலச் சிறந்ததாகும். அதுமட்டுமில்லாமல் வெளியில் உட்கொள்ளும் உணவுகளினால் அதிகளவு பாதக தன்மையே நிறைந்துள்ளது. உணவின் சுவையை மிகைப்படுத்துவதட்க்காக பல சுவையூட்டிகளையும், நிறமூட்டிகளையும் உணவுகளில் சேர்க்கின்றனர்.