கொழும்பில் மலலசேகர மாவத்தையில் உள்ள அரசகுடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கறுவாத் தோட்டம் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ் விபத்து நேற்று (19 ) இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது .
பொலீஸ் நிலையத்துக்கு கிடைத்த தகவலின் படி உடனடியாக செயற்பட்ட பொலீஸ் உத்தியோகஸ்தர்கள் மற்றும் தீயணைப்பு திணைக்கள அதிகாரிகள் தீயை அணைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்
தீயினால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் சொத்து சேதம் இன்னும் மதிப்பிடப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.இதுவரையில் விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியபடவில்லை .
இதுதொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கபட்டுள்ளது











