ஒட்டாவாவில் இந்தியன் கொலை தொடர்பில் கனடாவில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் கருத்து வெளியிட்டுள்ளது.
தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவொன்றினூடாகவே இக்கருத்தை கனடாவில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று ஒட்டாவாவிற்கு அருகில் உள்ள ராக்லேண்ட் பகுதியில் வைத்து குத்திக்கொலை செய்யப்பட்டிருந்தார்.
குறித்த நபர் ஓர் இந்தியர் என்ற தகவலும் வெளியானது.
இந்நிலையில் கனடாவில் ஓர் இந்தியர் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் மிகுந்த வருத்தமளிக்கிறது என கனடாவில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளையும் வழங்கும் பொருட்டு, தாம் அவர்களுடன் தொடர்பிலிருந்து வருவதாகவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் கூறியுள்ளது.