மானிடோபா மாகாணத்தின் லாக் டு போனட் நகராட்சிப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த தம்பதியினர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சூ மற்றும் ரிச்சர்ட் நோவல் ஆகிய இருவருமே, காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
நோவல் தம்பதியினருக்கு மரியாதை செலுத்தும் விதமாக வியாழக்கிழமை காலையில் மனிடோபா சட்டமன்றத்தில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டன.
வியாழக்கிழமை பிற்பகலில் மனிடோபா சட்டமன்றத்தில் நோவல் தம்பதியினருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, நோவல் தம்பதியினரின் மகன் எம்மெட் அந்த காட்டுத்தீயிலிருந்து காயங்களுடன் உயிர் தப்பியமை சுட்டிக்காட்டத்தக்கது.