மத்திய அரசு தனது புகழ்பெற்ற ‘பசுமை இல்ல சீரமைப்புத் திட்டத்தை’ (Green Home Retrofit Program) புதிய வடிவத்தில் மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.
வீடுகளைச் சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்ததாக மாற்றியமைக்கும் தனது சுற்றுச்சூழல் திட்டத்தை ‘கனடா பசுமை இல்ல மலிவு விலைத் திட்டம்’ (Canada Greener Homes Affordability Program – CGHAP) என்ற புதிய பெயரில் மத்திய அரசு, மறுவடிவமைப்பு செய்துள்ளது.
முந்தைய திட்டங்களைப் போலன்றி, இம்முறை தகுதியுடைய குடும்பங்கள் மற்றும் வாடகைதாரர்களுக்கு எந்தவித ஆரம்பக்கட்ட முதலீடும் (Upfront costs) இன்றி முற்றிலும் இலவசமாக இந்தச் சீரமைப்புகள் செய்து தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டத்தை மத்திய அரசின் இயற்கை வளத் துறை (Natural Resources Canada) நேரடியாக நடத்தாமல், நாட்டின் மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்கள் மூலமாகச் செயல்படுத்த முடிவு செய்துள்ளது. தற்போது கார்பன் உமிழ்வை 2030 ஆம் ஆண்டிற்குள் 37% ஆகக் குறைக்க வேண்டும் மற்றும் 2050-க்குள் ‘நெட் ஜீரோ’ (Net-Zero) இலக்கை அடைய வேண்டும் என்ற கனடாவின் பருவநிலை இலக்குகளை நோக்கிய பயணமாக, இத்திட்டம் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.











