கல்லூரி விழாக்களுக்கு கல்லூரியின் தொடர்பில்லாதவர்களை விருந்தினர்களாக அழைக்கவேண்டாம் என தெரிவித்து யாழ்.சுழிபுரம் விக்ரோறியா கல்லூரி பழைய மாணவர்கள் சிலரால் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்டெடுக்கப்பட்டது.
கல்லூரி முன்பாக பழைய மாணவர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாளை ஞாயிற்றுக்கிழமை கல்லூரியின் 150 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நடைபவனி நடைபெறவுள்ள நிலையில் அதற்கு பிரதம விருந்தினராக பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஐனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் அழைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கல்லூரியின் பழைய மாணவர் அல்லாத கல்லூரியுடன் தொடர்பில்லாதவர்களை விருந்தினர்களாக அழைக்க வேண்டாம் என தெரிவித்து கவனயீர்ப்பு இடம்பெற்றது.
அத்துடன் கல்லூரியில் நிலவும் உள்ளக முரண்பாடுகளை நிவர்த்தி செய்யவேண்டும், ஒருதலைப்பட்சமாக விருந்தினர் தொடர்பாக எடுக்கப்பட்ட எடுக்கப்பட்ட முடிவு திரும்பப் பெறப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளும் போராட்டக்காரர்களால் முன்வைக்கப்பட்டது.











