EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
மட்டக்களப்பில் முகநூல் மோசடி: போலியான லண்டன் வைத்தியரிடம் ரூ. 8.37 லட்சத்தை இழந்த பெண்!

மட்டக்களப்பில் முகநூல் மோசடி: போலியான லண்டன் வைத்தியரிடம் ரூ. 8.37 லட்சத்தை இழந்த பெண்!

ஆடி 23, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பில் முகநூல் (Facebook) மூலம் பழகிய போலியான வெளிநாட்டு வைத்தியர் ஒருவரிடம் 8 லட்சத்து 37 ஆயிரம் ரூபாயை இழந்து பெண் ஒருவர் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது பற்றி தெரியவருவதாவது, குறித்த பொலிஸ் பிரிவிலுள்ள பெண் ஒருவரின் முதநூலில் லண்டனில் உள்ள வெளிநாட்டவரான டான் என்ற வைத்தியருடன் கடந்த 13ம் திகதி இணைந்து கொண்டு நண்பர்களாகி இருவரும் முகநூல் ஊடாக கருத்து பரிமாற்றம் செய்து வந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, குறித்த பெண்ணின் கையடக்க தொலைபேசிக்கு  கடந்த 16ம் திகதி இலங்கை கட்டுநாயக்கா விமான நிலையப் பகுதியில் தம்மை பொதிகளை விநியோகிக்கும் கம்பனி என தெரிவித்து லண்டனில் இருந்து வைத்தியர் டான் என்பவர்  ஒரு பொதியை அனுப்பியுள்ளதாகவும்,   அதில் பல இலட்சம் ரூபா பெறுமதியான விலை உயர்ந்த பொருட்கள் உள்ளன. அதனை சுங்க திணைக்களத்தில் இருந்து விடுவித்து தருவதற்கு (கிளியர்) 87 ஆயிரம் ரூபா பணத்தை வங்கி கணக்கிற்கு அனுப்புமாறும் கோரியுள்ளனர்.

இதனை நம்பி அந்த பெண் 17ம் திகதி உடனடியாக 87 ஆயிரம் ரூபா அனுப்பிய பின்னர், மேலும் 3 லட்சம் தேவை என்றதும்  அந்த பெண்ணின் தாயார் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவை அந்த வங்கி கணக்கில் வைப்பில் இட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, மேலும்  மோசடி கும்பல் கணக்கில் பணம் வைப்பிலிடுமாறு கோரியதையடுத்து சந்தேகித்த அந்த பெண்  சுதாரித்து கொண்டு மோசடி கும்பலிடம் பணம் தர முடியாது என்ற பின்னர் மீண்டும் அவர்களின் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய போது, அது துண்டிக்கப்பட்டுள்ளது என பணத்தை மோசடி கும்பலிடம் இழந்த பெண் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

எனவே இவ்வாறு முகநூல் ஊடாக இணையவழி மோசடி கும்பலிடம் பலர் பல இலச்சம் ரூபா பணத்தை இழந்துள்ளதாகவும் இதனை  கருத்தில் கொண்டு தெரியாத இந்த முகநூல் மோசடிகாரர்களிடம் அவதானமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு பொலிசார் பொது மக்களிடம் கேட்டுக் கொள்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எதிர்க்கட்சியினரை ‘நாஜிக்கள்’ என விமர்சனம்: வேட்பாளரின் வேட்புமனுவை ரத்து செய்தது கியூபெக் லிபரல் கட்சி!
அண்மைய செய்திகள்

எதிர்க்கட்சியினரை ‘நாஜிக்கள்’ என விமர்சனம்: வேட்பாளரின் வேட்புமனுவை ரத்து செய்தது கியூபெக் லிபரல் கட்சி!

ஆடி 23, 2026
மொன்றியலில் தொடர் திருட்டுகளில் ஈடுபட்டு வந்த 29 வயது நபர் கைது!
அண்மைய செய்திகள்

மொன்றியலில் தொடர் திருட்டுகளில் ஈடுபட்டு வந்த 29 வயது நபர் கைது!

ஆடி 23, 2026
செம்மணி புதைகுழிக்குள் மழை அங்கியுடன் என்புக்கூடு கண்டுபிடிப்பு.
அண்மைய செய்திகள்

செம்மணி புதைகுழிக்குள் மழை அங்கியுடன் என்புக்கூடு கண்டுபிடிப்பு.

ஆடி 23, 2026
தலைமன்னார் கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 9 மீனவர்களுக்கு எதிர்வரும் 6ம் திகதி வரை விளக்கமறியல்.
அண்மைய செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட 9 மீனவர்களுக்கு எதிர்வரும் 6ம் திகதி வரை விளக்கமறியல்.

ஆடி 23, 2026
கோர்டி ஹோவ் சர்வதேசப் பால ஒப்பந்த உரையை வெளியிட்ட மத்திய அரசு. – பிரதமரின் வாக்குறுதி பொய்யானதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம்
அண்மைய செய்திகள்

கோர்டி ஹோவ் சர்வதேசப் பால ஒப்பந்த உரையை வெளியிட்ட மத்திய அரசு. – பிரதமரின் வாக்குறுதி பொய்யானதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம்

ஆடி 23, 2026
கியூபெக்கில் உள்ள நன்னீர் ஏரிகளில் வாழும் ‘கெளுத்தி’ (Catfish) வகை மீன்களிடையே, அபூர்வ வகை தோல் புற்றுநோய்
அண்மைய செய்திகள்

கியூபெக்கில் உள்ள நன்னீர் ஏரிகளில் வாழும் ‘கெளுத்தி’ (Catfish) வகை மீன்களிடையே, அபூர்வ வகை தோல் புற்றுநோய்

ஆடி 23, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

மொன்றியலில் சர்வதேச மாணவர்கள் வீதிப் போராட்டம் மற்றும் பேரணி

மொன்றியலில் சர்வதேச மாணவர்கள் வீதிப் போராட்டம் மற்றும் பேரணி

1 நாள் முன்னர்
எங்கள் பாடசாலைக்கு சுமந்திரன் வேண்டாம் – யாழில் போராட்டம்

எங்கள் பாடசாலைக்கு சுமந்திரன் வேண்டாம் – யாழில் போராட்டம்

5 நாட்கள் முன்னர்
செம்மணி வளைவு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

செம்மணி வளைவு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

1 நாள் முன்னர்
செம்மணி மனித புதைகுழியில் 11 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு

செம்மணி மனித புதைகுழியில் 11 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு

1 நாள் முன்னர்
கிராம மட்ட வறுமையை ஒழித்து கல்வியை வளர்ப்போம் – கடற்தொழில் அமைச்சர்

கிராம மட்ட வறுமையை ஒழித்து கல்வியை வளர்ப்போம் – கடற்தொழில் அமைச்சர்

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In