EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
பொதுமக்கள்  முழுமையான ஒத்துழைப்பை எமக்கு  வழங்க  வேண்டும் –  ஜெகதீஸ்வரன் மயூரன்

பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை எமக்கு வழங்க வேண்டும் – ஜெகதீஸ்வரன் மயூரன்

ஆடி 24, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

யாழ்.மாநகரத்தைச் சுகாதாரமான மற்றும் சுற்றுலாத் தளத்துக்கேற்ற நகரமாகவும் மாற்றுவதே எமது முதன்மை இலக்காகும். இதற்குப் பொதுமக்கள் தரம் பிரித்த குப்பைகளை வழங்கி முழுமையான ஒத்துழைப்பை நல்க வேண்டும் என யாழ். மாநகரசபையின் மராமத்துக் குழுத் தலைவர் ஜெகதீஸ்வரன் மயூரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

கல்லுண்டாய் பகுதி யாழ் .மாநகரசபையின் எல்லைக்கு அப்பாற்பட்டு வேறு ஒரு பிரதேசசபையின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ளதால், கழிவுகளை அகற்றுவதில் ஆரம்பத்தில் பல இன்னல்களையும், போராட்டங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

ஈக்கள் பெருகும் பருவங்களில் சில அசௌகரியங்கள் ஏற்படுவது இயல்பான ஒன்று. அதனைச் சுட்டிக்காட்டி நிலத் தரகர்கள் சிலரால் மக்கள் தூண்டிவிடப்பட்டு மாநகரசபைக்கு முன்னால் குழப்பங்கள் விளைவிக்கப்பட்டன.

காக்கைதீவு காணியானது சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர், சி.வி.கே.சிவஞானம் மேயராக இருந்த காலத்தில் கழிவு முகாமைத்துவத்துக்காகவே மாநகரசபையின் சொந்த நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட ஒன்றாகும்.

புதிய நிர்வாகம் ஆட்சிப் பொறுப்பேற்ற முதலாம் கட்டத்தில், ஆரம்ப 6 மாத காலத்துக்குரிய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடுகள் இல்லாததால் கடுமையான நிதி நெருக்கடி நிலவியது. நிதி நிலையை ஒழுங்குபடுத்திய பின்னர், கடந்த 6 மாத காலமாக காக்கைதீவு மற்றும் கல்லுண்டாய் மையங்களைச் சபை மட்டத்தில் அபிவிருத்தி செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

கழிவு முகாமைத்துவத்துக்காகப் புதிய வாகனங்கள், இயந்திரங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப உத்திகள் பயன்படுத்தப்பட்டு வருவதோடு, அங்குள்ள வீதிகள் மற்றும் பசளை தயாரிக்கும் இடங்களும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

தற்போது காக்கைதீவில் மறுசுழற்சி செய்யப்படும் கழிவுகள் தவிர்க்கப்பட்டு, உக்கக்கூடிய மற்றும் பசளையாக்கக்கூடிய கழிவுகள் மட்டுமே கல்லுண்டாய் பகுதிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

யாழ். மாநகரத்துக்குள் மாதமொன்றுக்குச் சுமார் 5 லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர். அத்துடன் 1 லட்சம் நிரந்தரக் குடியிருப்பாளர்களும் வாழ்கின்றனர். இவர்கள் அனைவரது கழிவுகளையும் மாநகரசபையே முகாமைத்துவம் செய்து வருகின்றது.

தரம் பிரிக்கப்படாத கழிவுகளே பெரிய சவாலாக அமைகின்றன.

சொந்த மாநகரத்தின் கழிவுகளை வேறு இடங்களுக்கு மாற்ற முடியாது. எமது கழிவுகளுக்கான தீர்வை எமது எல்லைக்குள்ளேயே காண்பதே முறையானது.

அந்தவகையில் வீடுகளுக்கு உழவு இயந்திரங்கள் வரும் போது, பொதுமக்கள் கழிவுகளைத் தரம் பிரித்து வழங்கினால் மட்டுமே முகாமைத்துவத்தைச் சிரமமின்றி மேற்கொள்ள முடியும். அத்துடன் வீதிகளில் கழிவுகளைக் கொட்டுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

எனவே இன்னும் 6 மாத காலத்துக்குள் காக்கைதீவை ஒரு சிறந்த மறுசுழற்சி மையமாகவும், யாழ் மாநகரத்தைச் சுகாதாரமான மற்றும் சுற்றுலாத் தளத்திற்கு ஏற்ற நகரமாகவும் மாற்றுவதே எமது முதன்மை இலக்காகும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

கியூபெக் – லோங்வே மெட்ரோ ரயில் நிலையத்தில் நள்ளிரவில் மோதல் — பொலிஸார் தீவிர விசாரணை!
அண்மைய செய்திகள்

கியூபெக் – லோங்வே மெட்ரோ ரயில் நிலையத்தில் நள்ளிரவில் மோதல் — பொலிஸார் தீவிர விசாரணை!

ஆடி 25, 2026
மொன்றியலில் சிறுவர் பாதுகாப்பு நிலைய பராமரிப்பில் இருந்த 3 சிறுவர்கள் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

மொன்றியலில் சிறுவர் பாதுகாப்பு நிலைய பராமரிப்பில் இருந்த 3 சிறுவர்கள் உயிரிழப்பு

ஆடி 25, 2026
இலங்கையில் மீண்டும் ஒருபோதும் இனக்கலவரங்கள் உருவாகக் கூடாது – சோசலிச இளைஞர் சங்கம்
அண்மைய செய்திகள்

இலங்கையில் மீண்டும் ஒருபோதும் இனக்கலவரங்கள் உருவாகக் கூடாது – சோசலிச இளைஞர் சங்கம்

ஆடி 24, 2026
யாழ்ப்பாண பழைய கச்சேரி , மந்திரிமனை ஆகியவற்றை பாதுகாக்க நடவடிக்கை
அண்மைய செய்திகள்

யாழ்ப்பாண பழைய கச்சேரி , மந்திரிமனை ஆகியவற்றை பாதுகாக்க நடவடிக்கை

ஆடி 24, 2026
சுற்றுச்சூழலை அழித்து அபிவிருத்தியை அடைய முடியாது – ஆளுநர் நா.வேதநாயகன்
அண்மைய செய்திகள்

சுற்றுச்சூழலை அழித்து அபிவிருத்தியை அடைய முடியாது – ஆளுநர் நா.வேதநாயகன்

ஆடி 24, 2026
வடக்கில் இருந்து குறைப்பாடுகளுடன் சேவையில் ஈடுபடும் சொகுசு பேருந்துகள் தொடர்பில் அறியத்தரவும்  – சூ.விமலேஸ்வரன்
அண்மைய செய்திகள்

வடக்கில் இருந்து குறைப்பாடுகளுடன் சேவையில் ஈடுபடும் சொகுசு பேருந்துகள் தொடர்பில் அறியத்தரவும் – சூ.விமலேஸ்வரன்

ஆடி 24, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 38ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று  நடைபெற்றது

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 38ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று நடைபெற்றது

4 நாட்கள் முன்னர்
கிளிநொச்சியில் அனுமதிப் பத்திரத்தை தவறாக பயன்படுத்தி மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது

கிளிநொச்சியில் அனுமதிப் பத்திரத்தை தவறாக பயன்படுத்தி மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது

4 நாட்கள் முன்னர்
மாநகராட்சி தடையை மீறி கனேடிய தேசிய புகையிரத நிறுவனம் (CN) மொன்றியலில் களைகொல்லி தெளித்ததால் சர்ச்சை!

மாநகராட்சி தடையை மீறி கனேடிய தேசிய புகையிரத நிறுவனம் (CN) மொன்றியலில் களைகொல்லி தெளித்ததால் சர்ச்சை!

4 நாட்கள் முன்னர்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் கைது

3 நாட்கள் முன்னர்
“விஞ்ஞானி டெனிஸ் லூ மீதான விசாரணையைத் தன்னிச்சையாகத் தொடங்கவில்லை” நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது கனேடிய உளவு அமைப்பு

“விஞ்ஞானி டெனிஸ் லூ மீதான விசாரணையைத் தன்னிச்சையாகத் தொடங்கவில்லை” நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது கனேடிய உளவு அமைப்பு

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In