EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
மன்னாரில் சடலமாக மீட்கப்பட்ட 24 வயதுடைய  மீனவர்

மன்னாரில் சடலமாக மீட்கப்பட்ட 24 வயதுடைய மீனவர்

ஆவணி 1, 2026
வகை: இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள காட்டாஸ்பத்திரி மீன்பிடி துறையில் இருந்து கடந்த வியாழக்கிழமை 30 ஆம் திகதி மீன் பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர் ஒருவர் இன்று (1) சனிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட மீனவர் காட்டாஸ்பத்திரி கிராமத்தைச் சேர்ந்த 24 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள காட்டாஸ்பத்திரி மீன்பிடி துறையில் இருந்து கடந்த வியாழக்கிழமை 30 ஆம் திகதி மீன் பிடிக்க கண்ணாடியிழை படகில் சென்ற இரு மீனவர்கள் மீன் பிடிப்பதற்கான வலையை கடலில் பாய்ச்சி விட்டு கரைக்கு திரும்பிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகின்றது.

இதன் போது குறித்த படகில் எரிபொருள் முடிந்ததன் காரணமாக எரி பொருளை எடுத்து வரலாம் என்னும் நோக்கில் குறித்த மீனவர் கடலில் குதித்து நீந்தி கரை சேருவதற்காக சென்ற சந்தர்ப்பத்தில் பலத்த காற்றின் காரணமாக அவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் 30 ஆம் திகதி வியாழன் மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து குறித்த சந்தர்ப்பத்தில் காட்ட ஆஸ்பத்திரி பகுதியில் இருந்து தொழிலுக்குச் சென்ற சக மீனவர்கள் கடலில் தத்தளித்து நின்றதாக கூறப்படுகின்ற குறித்த படகையும் மீனவரையும் மீட்டு கரைக்கு வந்துள்ளனர்.

மேலும் எரி பொருளை பெற்றுக் கொண்டு வருவதாக கூறி கடலில் நீந்திச் சென்ற நிலையில் காணாமல் போன சக மீனவரையும் தேடியுள்ளனர்.

காணாமல் போன மீனவர் தொடர்பாக எவ்வித தகவலும் தெரியாத நிலையில் எருக்கலம் பிட்டி மீனவர்கள் இன்று சனிக்கிழமை (1) காலை கடலில் சடலம் ஒன்று காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து காட்டாஸ்பத்திரி மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

குறித்த தகவல்களுக்கு அமைவாக காட்டாஸ்பத்திரி மீனவர்கள் தேடிச்சென்று குறித்த சடலத்தை மீட்டதுடன் பேசாலை பொலிசாருக்கு தகவல் வழங்கி குறித்த சடலத்தை கரைக்கு கொண்டு வந்துள்ளதாக தெரிய வருகிறது.

இதையடுத்து மீட்கப்பட்ட சடலம் மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் மன்னார் காட்டாஸ்பத்திரி கிராமத்தைச் சேர்ந்த 24 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ஊடகவியலாளர் நிலக்ஷனின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
இலங்கை

ஊடகவியலாளர் நிலக்ஷனின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

ஆவணி 1, 2026
மஹர சிறைச்சாலையில் நிலவும் பதற்றநிலை
அண்மைய செய்திகள்

மஹர சிறைச்சாலையில் நிலவும் பதற்றநிலை

ஆவணி 1, 2026
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் “மகாவித்தியன்ஸ் நாள் – 2026”
இலங்கை

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் “மகாவித்தியன்ஸ் நாள் – 2026”

ஆவணி 1, 2026
யாழ் பிரதான தபால் நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிரதி அமைச்சர்
அண்மைய செய்திகள்

யாழ் பிரதான தபால் நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிரதி அமைச்சர்

ஆவணி 1, 2026
பலாலி விமான நிலைய அபிவிருத்தியை பார்வையிட்ட கடற்தொழில் அமைச்சர்
அண்மைய செய்திகள்

பலாலி விமான நிலைய அபிவிருத்தியை பார்வையிட்ட கடற்தொழில் அமைச்சர்

ஆவணி 1, 2026
யாழ். பிரதான பொலிஸ் நிலையத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் குழுவினர் பரிசோதனை
அண்மைய செய்திகள்

யாழ். பிரதான பொலிஸ் நிலையத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் குழுவினர் பரிசோதனை

ஆவணி 1, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

குறிகட்டுவான் கடற்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

குறிகட்டுவான் கடற்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

3 நாட்கள் முன்னர்
யாழ்ப்பாணம் கீரிமலை குப்பை மேட்டிற்கு தீ வைப்பு

யாழ்ப்பாணம் கீரிமலை குப்பை மேட்டிற்கு தீ வைப்பு

3 நாட்கள் முன்னர்
5 நாட்களில் 2.4 மில்லியன் ரூபா வருமானம்

5 நாட்களில் 2.4 மில்லியன் ரூபா வருமானம்

6 நாட்கள் முன்னர்
மொன்றியால்-ட்ரூடோ விமான நிலையத்தில் துர்நாற்றம்: அமெரிக்க சுங்கத் துறை சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

மொன்றியால்-ட்ரூடோ விமான நிலையத்தில் துர்நாற்றம்: அமெரிக்க சுங்கத் துறை சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

3 நாட்கள் முன்னர்
அமெரிக்க அரசியல் அதிகாரி ரேச்சல் ஹக்கின்ஸிற்கும், பா.உ ரவிகரனுக்கும் இடையில் சந்திப்பு

அமெரிக்க அரசியல் அதிகாரி ரேச்சல் ஹக்கின்ஸிற்கும், பா.உ ரவிகரனுக்கும் இடையில் சந்திப்பு

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In