இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி கிளையின் ஏற்பாட்டில் “உள்ளூராட்சி மன்றங்களின் வினைத்திறன்மிக்க இயங்குநிலை” தொடர்பான கருத்தமர்வு கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் இன்று (8) நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் விசேட அழைப்பாளராக தமிழக அரசின் உள்ளூராட்சித்துறை உயர்நிலைக்குழுக்களின் உறுப்பினரும் துறைசார் நிபுணருமான பேராசிரியர் G.பழனித்துரை கலந்து கொண்டார்.
இந்த கலந்துரையாடலில் கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உபதவிசாளர்கள், உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர். தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.











